ஐபிஎல்’ல விராட் கோலி இதை செஞ்சதை நானே பாத்தேன்.. கம்பீர் தான் ரிட்டையராக வெச்சுட்டாரு.. ஹீலி சந்தேகம்

Alyssa Healy 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றனர். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக நிறைய வெற்றிகளில் பங்காற்றிய அவர்களில் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதில் பலருக்கும் ஆச்சரியமில்லை. ஏனெனில் கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் மிகவும் மோசமாக பேட்டிங் செய்த அவர் தோல்விக்குக் காரணமாக அமைந்தார்.

குறிப்பாக ஆஸ்திரேலியாவில் ஒரு அரை சதத்தை கூட அடிக்காமல் திண்டாடிய ரோகித் சர்மா கடைசிப் போட்டியில் தன்னைத்தானே அணியிலிருந்து நீக்கிக்கொண்ட முதல் இந்திய கேப்டனாக மோசமான சாதனை படைத்தார். மறுபுறம் ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் சதத்தை அடித்த விராட் கோலி எஞ்சிய போட்டிகளில் அசத்தவில்லை இருப்பினும் மிகச்சிறந்த ஃபிட்னெஸ் கொண்டிருக்கும் அவர் இன்னும் சில வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ரிட்டையராக வெச்சுட்டாரு:

ஆனால் அடுத்து நடைபெறும் இங்கிலாந்து தொடரில் அவர்கள் இருவரையும் கழற்றி விட தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் முடிவெடுத்ததாக செய்திகள் வெளிவந்தன. அதற்கு முன்பாக அவர்களாகவே அடுத்தடுத்து ஓய்வு பெற்றது இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் அடுத்து நடைபெறும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராவதற்காக விராட் கோலி 2025 ஐபிஎல் தொடரில் சிவப்பு பந்துகளைக் கொண்டு பயிற்சிகளை எடுத்ததை தாம் பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அப்படிப்பட்ட விராட் கோலி திடீரென ஓய்வு பெறுவதற்கு கௌதம் கம்பீர் தான் காரணம் என்று ஹீலி மறைமுகமாக தெரிவித்துள்ளார். இது பற்றி வில்லோ ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தொகுப்பாளர் ஆடம் பெக்காக் பேசியது பின்வருமாறு. “கடந்த வாரம் ஒருவரிடம் நான் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது விராட் கோலி – கௌதம் கம்பீர் ஆகியோரிடையேயான உறவு பற்றிய மொத்தமான பின்னணிக் கதை சூழ்நிலைகளை முழுமையாக தெரிந்து கொண்டேன்” எனக் கூறினார்.

- Advertisement -

ஹீலி சந்தேகம்:

அப்போது அலிஷா ஹீலி பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் தொடரின் போது விராட் கோலி சிவப்பு பந்துகளைக் கொண்டு பயிற்சி எடுப்பதை நான் பார்த்தேன். ஆனால் கடந்த சில வாரங்களுக்குள் ஏதோ விஷயம் நடந்துள்ளது. அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஆஸ்திரேலிய தொடருக்குப்பின் அவர் டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் எண்ணத்துடன் இல்லை”

இதையும் படிங்க: பயிற்சி போட்டியில் விராட் கோலியின் 18 ஆம் நம்பர் ஜெர்சியை அணிந்த முகேஷ் குமார் – பி.சி.சி.ஐ தடை செய்யுமா?

“அதனாலேயே இங்கிலாந்து தொடரில் விளையாடுவதற்கு அவர் ஆர்வத்துடன் பயிற்சிகளை எடுத்தார்” என்று கூறினார். முன்னதாக 2025 ஐபிஎல் தொடரில் டெல்லிக்காக அலிஷா ஹீலி கணவர் மிட்சேல் ஸ்டார்க் விளையாடினார். அப்போது அவருடன் சேர்ந்து பயணிக்கையில் விராட் கோலி பயிற்சி எடுத்ததை ஹீலி பார்த்ததாக கூறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement