பயிற்சி போட்டியில் விராட் கோலியின் 18 ஆம் நம்பர் ஜெர்சியை அணிந்த முகேஷ் குமார் – பி.சி.சி.ஐ தடை செய்யுமா?

Mukesh and Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டு விட்டது. அதனை தொடர்ந்து முதன்மை இந்திய அணியானது இன்னும் சில தினங்களில் இங்கிலாந்துக்கு புறப்படும் என்று கூறப்படுகிறது.

விராட் கோலியின் ஜெர்சி நம்பரை பயன்படுத்திய முகேஷ் குமார் :

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக தற்போது இந்திய ஏ அணியை சேர்ந்த வீரர்கள் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு பயிற்சி போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் நடைபெற்று வரும் முதலாவது பயிற்சி போட்டியில் வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் குமார் விராட் கோலியின் 18-ஆம் நம்பர் ஜெர்சியை அணிந்து விளையாடி வருகிறார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் சச்சின், தோனி போன்று விராட் கோலியின் 18-ம் நம்பர் ஜெர்ஸிக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும் என்றும் விராட் கோலியின் லெகசியை கௌரவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை பிசிசிஐ எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பி.சி.சி.ஐ இந்த விவகாரத்தில் கூறுவது என்ன? என்பது குறித்த சில தகவல்களை இங்கு காணலாம். அந்த வகையில் ஏற்கனவே சச்சினின் 10-ம் நம்பர் ஜெர்சிக்கும், தோனியின் 7-ம் நம்பர் ஜெர்சிக்கும் ஓய்வு வழங்கியுள்ள பி.சி.சி.ஐ தற்போது வரை விராட் கோலியின் ஜெர்ஸி எண்ணுக்கு ஓய்வு வழங்கவில்லை. ஏனெனில் தற்போது அவர் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஒருநாள் போட்டிகளில் அவர் தொடர்ச்சியாக விளையாட இருக்கிறார்.

- Advertisement -

இதன் காரணமாக தற்போதைக்கு அந்த நம்பருக்கு ஓய்வு கொடுக்க முடியாது என்று கூறப்படுகிறது. மேலும் முகேஷ் குமார் தற்போது பயிற்சி போட்டியில் தான் 18-ம் நம்பர் ஜெர்சியை பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் அதைத்தவிர்த்து முதன்மை அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டால் நிச்சயம் அவர் தனது பழைய எண்ணான 49-ஆம் நம்பரை தான் பயன்படுத்த முடியும் என்றும் பி.சி.சி.ஐ கூறியுள்ளது.

இதையும் படிங்க : ஆர்சிபி இடமிருந்து பஞ்சாப் கப்பை திருடப்போறாங்க.. அவர நினச்சா தான் வருத்தமா இருக்கு.. அலிஷா ஹீலி

அதேவேளையில் விராட் கோலியின் ரசிகர்கள் அனைவரும் விராட் கோலி முற்றிலுமாக இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்றதும் அவரது 18-ம் நம்பருக்கு ஓய்வு வழங்க வேண்டும் என்று முறையிட்டு வருகின்றனர்.

Advertisement