ரன் போகுதா.. விக்கெட் விழலையா.. இவர் வந்தா போதும்.. ஜஸ்ப்ரீத் பும்ராவை – பாராட்டிய வருண் ஆரோன்

Varun Aaron
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளை மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான ஜஸ்ப்ரீத் பும்ரா காயம் காரணமாக தவற விட்டார். அப்படி அவர் இல்லாமல் ஆரம்பகட்ட போட்டிகளில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது. அதன் பின்னர் எப்போது மும்பை அணியில் பும்ரா இணைந்தாரோ அதிலிருந்து மும்பை அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்தது.

பும்ராவின் திறமை அபாரமானது : வருண் ஆரோன் பாராட்டு

பின்னர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற எலுமினேட்டர் போட்டியிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி இரண்டாவது குவாலிபயர் போட்டிக்கு மும்பை அணி தகுதி பெற்றது. அந்த போட்டியிலும் ஜஸ்ப்ரீத் பும்ரா மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார்.

- Advertisement -

அந்த வகையில் ஒட்டுமொத்தமாக அந்த போட்டியில் 436 ரன்கள் வரை சென்றநிலையில் தனி நபராக அட்டகாசமான 4 ஓவர்களை வீசிய அவர் 27 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். அதிலும் குறிப்பாக போட்டியின் முக்கிய நேரத்தில் வாஷிங்டன் சுந்தரை வீழ்த்தி மீண்டும் மும்பை அணியை வெற்றிப்பாதைக்கு திருப்பினார்.

எப்போதெல்லாம் மும்பை அணி பந்துவீச்சில் தடுமாற்றத்தை சந்திக்கிறதோ அப்போதெல்லாம் ஒரு மருந்து போன்று பும்ரா பந்துவீச்சில் உதவுவதாக முன்னாள் இந்திய வீரரான வருண் ஆரோன் பாராட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

போட்டியில் எப்போதெல்லாம் ரன்களை தடுக்க வேண்டுமோ, எப்போதெல்லாம் விக்கெட்டை வீழ்த்த வேண்டுமோ அப்போது நாம் அழைக்கக்கூடிய ஒரு வீரராக பும்ரா இருக்கிறார். அவரது திறமை என்பது உண்மையிலேயே அபரிவிதமானது.

இதையும் படிங்க : 2001 கி.மீ.. பிசிசிஐ போட்ட அத்தனை ராஜத் தந்திரங்களையும் நொறுக்கிய மழை.. முகத்தில் கரியை பூசிய இயற்கை

போட்டியின் எந்த நேரத்தில் அதிக ரன்கள் சென்றாலும் சிறிதும் பதட்டம் அடையாமல் நிதானமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி தருகிறார். அவரது சிறப்பான செயல்பாட்டின் மூலமாகவே இந்த சீசனில் மும்பை அணி பல வெற்றிகளை பெற்றுள்ளது என வருண் ஆரோன் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement