2001 கி.மீ.. பிசிசிஐ போட்ட அத்தனை ராஜத் தந்திரங்களையும் நொறுக்கிய மழை.. முகத்தில் கரியை பூசிய இயற்கை

Qualifier Rain
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் குவாலிபயர் 1 போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப்பை தோற்கடித்த பெங்களூரு நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அடுத்து நடைபெற்ற எலிமினேட்டரில் 3வது இடத்தைப் பிடித்த குஜராத்தை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பிய மும்பை குவாலிபயர் 2 போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.

அந்த சூழ்நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி குஜராத் மாநிலத்தில் இருக்கும் அகமதாபாத் நகரில் குவாலிபயர் 2 போட்டி இரவு 7.30 மணிக்கு துவங்கியது. அந்தப் போட்டியில் பஞ்சாப் அணியை மும்பை எதிர்கொண்டது. அந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

பிசிசிஐ போட்ட ராஜத்தந்திரம்:

அதைத்தொடர்ந்து மும்பை பேட்டிங் செய்வதற்காக தயாரான போது ஜோராக வந்த மழை போட்டியைத் துவங்க விடாமல் நிறுத்தியது. முன்னதாக 2025 ஐபிஎல் தொடர் கடந்த மே 22ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்கியது. ஏற்கனவே வெளியிட்ட அட்டவணையின் படி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் குவாலிபயர் 2 மற்றும் இறுதிப் போட்டி நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது.

அந்த அட்டவணையின் படி விறுவிறுப்பாக நடைபெற்ற அத்தொடர் 58 போட்டிகளின் முடிவில் இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினைக் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒரு வாரம் கழித்து மீண்டும் துவங்கிய ஐபிஎல் தொடருக்காக பிசிசிஐ புதிய அட்டவணையை தயாரித்தது. அப்போது கொல்கத்தாவில் மழை பெய்வதற்கான சூழ்நிலைகள் அதிகமாக இருப்பதாக இந்திய வானிலை மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

இயற்கையை வெல்ல முடியுமா:

அந்த அறிக்கையைப் பார்த்த பிசிசிஐ குவாலிபயர் 2, ஃபைனல் போட்டிகள் மழையால் பாதிக்கக்கூடாது என்று கருதியது. அதன் அடிப்படையில் பிசிசிஐ புதிய அட்டவணையை தயாரித்து வெளியிட்டது. அந்த அட்டவணையில் கொல்கத்தாவில் நடைபெறவிருந்த குவாலிபயர் 2, ஃபைனல் போட்டிகள் அகமதாபாத் மைதானத்திற்கு மாற்றப்படும் என்று பிசிசிஐ அறிவித்தது.

இதையும் படிங்க: ஐபிஎல் 2025 கோப்பையை ஆர்சிபி ஜெய்க்கும்.. விராட் கோலி இல்ல.. அவர் தான் ஆட்டநாயகன்.. வார்னர் கணிப்பு

கடைசியில் பார்த்தால் கொல்கத்தாவில் இருந்து சுமார் 2001 கிலோ மீட்டர் பயணித்து அகமதாபாத் வந்துள்ள மழை இங்கேயும் இடையூறு செய்துள்ளது. இதன் காரணமாக பிசிசிஐ போட்ட அத்தனை ராஜதந்திரங்களையும் நொறுக்கிய மழை முகத்தில் கரியைப் பூசியுள்ளது என்றே சொல்லலாம். இதிலிருந்து இயற்கையை யாராலும் வெல்ல முடியாது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement