என் பொண்ணு ஏன் ரிட்டையரானீங்கன்னு? கேட்டதற்கு.. விராட் கோலி சொன்ன பதில் இதான்.. ஹர்பஜன் சிங்

Harbhajan Singh
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2011ஆம் ஆண்டு அறிமுகமான அவர் ஆரம்பக் காலங்களில் தடுமாறினார். இருப்பினும் அப்போதைய கேப்டன் தோனியின் ஆதரவுடன் விரைவிலேயே அசத்தத் துவங்கிய அவர் சச்சின் டெண்டுல்கர் ஓய்வுக்கு பின் இந்திய பேட்டில் துறையின் முதுகெலும்பாக உருவெடுத்து வெற்றிகளில் பங்காற்றினார்.

மேலும் தோனி ஓய்வு பெற்ற 2014ஆம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் இந்தியா 7வது இடத்தில் தடுமாறிக் கொண்டிருந்தது. அப்போது கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி 2016 – 2021 வரை தொடர்ந்து இந்தியாவை உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்க வைத்தார். மேலும் ஆஸ்திரேலியாவில் அவருடைய தலைமையில் முதல் முறையாக இந்தியா டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது.

- Advertisement -

என் பொண்ணு கேட்டா:

அந்த வகையில் மொத்தம் 40 வெற்றிகளைப் பெற்ற விராட் கோலி வெற்றிகரமான ஆசிய மற்றும் இந்திய கேப்டனாக சாதனைகளைப் படைத்தார். அப்படிப்பட்ட அவர் மிகச்சிறந்த ஃபிட்னஸ் கொண்டிருப்பதால் இன்னும் சில வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் கடந்த நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் இந்தியா அடுத்தடுத்த தோல்விகளை சந்திக்க விராட் கோலி, ரோஹித் சர்மா முக்கிய காரணமானார்கள்.

அதனால் அவர்களை அடுத்த இங்கிலாந்து தொடரில் கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்தது. அதற்கு முன்பாக அவர்களாகவே ஓய்வு பெற்றது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் ஏன் அதற்குள் ஓய்வு பெற்றீர்கள்? என்று விராட் கோலிக்கு மெசேஜ் செய்து தம்முடைய மகள் ஹினாயா கேட்டதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

விராட் கோலியின் பதில்:

அதற்கு “விடைபெறும் நேரம் வந்து விட்டது குழந்தையே” என்று தன்னுடைய மகளுக்கு விராட் கோலி பதில் மெசேஜ் செய்ததாகவும் ஹர்பஜன் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி ஏன் நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றீர்கள்? என்று நான் ட்விட்டரில் கேட்டேன்”

இதையும் படிங்க: தோனி, கோலிக்கு ஒரு நியாயம்.. திக்வேஷ்க்கு வேற நியாயமா? இதை செய்யாம விட்ருக்கலாம்.. பிசிசிஐயை சாடிய சேவாக்

“என்னுடைய மகள் என்னிடம் “அப்பா ஏன் விராட் கோலி ஓய்வு பெற்றார்?” என்று கேட்டார். சொல்லப்போனால் அவள் விராட் கோலிக்கு மெசேஜ் செய்து “இது ஹினாயா, விராட் நீங்கள் ஏன் ஓய்வு பெற்றீர்கள்?” என்று கேட்டாள். அதனால் விராட் கோலியின் இதயம் மூழ்கியது. அதற்கு விராட் கோலி சிரித்துக் கொண்டே “குழந்தையே, இது விடை பெறுவதற்கான நேரம்” என்று என்னுடைய மகளுக்கு பதில் கொடுத்தார். இதுவே ஓய்வுக்கான சரியான நேரம் என்பதை அவர் அறிந்திருந்தார்” என்று கூறினார்.

Advertisement