இந்த சீசன் முழுசா நாங்க கஷ்டப்பட இதுவே காரணம்.. கடைசி போட்டியில் அடைத்த தோல்விக்கு பின் – ரிஷப் பண்ட் பேட்டி

Rishabh Pant (1)
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 70-வது லீக் போட்டியானது நேற்று லக்னோ நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், ஜிதேஷ் சர்மா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இந்த சீசன் எங்களுக்கு மோசமாக அமைய இதுவே காரணம் : ரிஷப் பண்ட் பேட்டி

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது. லக்னோ அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பண்ட் 118 ரன்களையும், மிட்சல் மார்ச் 67 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 228 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது லக்னோ அணியின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர் கொண்டு 18.4 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக ஜிதேஷ் சர்மா 85 ரன்களையும், விராட் கோலி 54 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில் : இந்த போட்டியில் 40 ஓவருமே நல்ல கிரிக்கெட்டை நீங்கள் பார்த்துள்ளீர்கள். நிச்சயமாக டி20 போட்டிகளில் எப்போதுமே கடைசி பந்து வரை ஒரு அணியின் வெற்றி என்பது உறுதியாகி விடாது என்பதை இந்த போட்டி காண்பித்து இருக்கிறது.

- Advertisement -

இந்த தொடர் முழுவதுமே நாங்கள் மிகப்பெரிய சரிவை சந்தித்ததற்கு காரணம் எங்கள் அணியில் இடம்பெற்ற பெரும்பாலான வீரர்கள் காயத்தால் பாதிக்கப்பட்டது தான் என்று கூறுவேன். அப்படி நிறைய வீரர்களை நாங்கள் காயத்தால் தவறவிட்டது இந்த சீசனில் எங்களை மிகவும் வருத்தியுள்ளது. இந்த போட்டியில் நான் சதம் அடித்ததில் மகிழ்ச்சி தான். இந்த போட்டியை போன்றே அனைத்து போட்டியிலும் விளையாட நினைத்தேன். ஆனால் அது அமையாமல் சென்று விட்டது. இந்த போட்டியில் நான் மிகச் சிறப்பாக பேட்டிங்கை ஆரம்பித்ததாலே பெரிய ரன்களை குவிக்க முடிந்தது.

இதையும் படிங்க : ஆர்சிபி வெற்றிக்கு என் குரு டிகே சொன்ன இந்த ஆலோசனையே காரணம்.. லக்னோவை சாய்த்த ஜிதேஷ் பேட்டி

இந்த தொடரில் நாங்கள் அடைந்த தோல்வியின் மூலம் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டுள்ளோம். மேலும் எங்களுடைய பலவீனங்களை சரி செய்ய இன்னும் நாங்கள் அமர்ந்து பேச வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கிறது. அதனை சரிசெய்து இனிவரும் காலங்களில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement