சி.எஸ்.கே அணியில் இருந்து வெளியேறுங்கள்.. ரசிகரின் விமர்சனத்திற்கு – பதிலளித்த ரவிச்சந்திரன் அஷ்வின்

Ashwin
- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இதுவரை ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. ஆனால் நடப்பு 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது சி.எஸ்.கே அணிக்கு மிக மோசமான ஆண்டாக அமைந்ததோடு மட்டுமின்றி மறக்கப்பட வேண்டிய ஒரு சீசனாகவும் மாறியுள்ளது. இந்த ஆண்டு சிஎஸ்கே அணியின் மோசமான செயல்பாடு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

ரசிகரின் விமர்சனத்திற்கு பதிலளித்த ரவிச்சந்திரன் அஷ்வின் :

அந்த வகையில் இந்த ஆண்டு சிஎஸ்கே அணி தாங்கள் விளையாடிய 14 போட்டிகளில் 10 தோல்விகளை பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து வெளியேறியுள்ளது. இப்படி ஐபிஎல் தொடரின் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து வெளியேறுவது சிஎஸ்கே அணிக்கு இதுவே முதல்முறை. அதுமட்டும் இன்றி அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகளில் ப்ளே ஆப் வாய்ப்பை தவறவிட்டதும் இதுதான் முதல் முறை.

- Advertisement -

அந்த அளவிற்கு சிஎஸ்கே அணியின் ஆட்டம் இந்த வருடம் மிக மோசமாக அமைந்துள்ளது. இப்படி சிஎஸ்கே அணி மிகப்பெரிய சரிவை சந்தித்ததற்கு சரியான வீரர்களை மெகா ஏலத்தின் போது வாங்காததும், மோசமான அணித்தேர்வுமே காரணம் என்றும் பலரும் விமர்சித்து வருகின்றனர். அதோடு சென்னை அணியில் இருந்து அஸ்வின், ஜடேஜா போன்ற வீரர்களை நீக்கிவிட்டால் பெரிய தொகை கிடைக்கும் என்றும் அந்த தொகையை வைத்து இளம் வீரர்களை வாங்கி அணியை பலப்படுத்த வேண்டும் என்றும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிஎஸ்கே அணியில் இடம்பெற்று விளையாடும் தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினிடம் ரசிகர் ஒருவர் நேரலையில் : நீங்கள் சி.எஸ்.கே அணியை விட்டு தயவுசெய்து வெளியேறிவிடுங்கள் என்று கமெண்ட் செய்திருந்தார். அந்த கமெண்ட்டை கண்ட அஸ்வின் எந்த ஒரு கோபத்தையும் வெளிப்படுத்தாமல் உருக்கமான ஒரு பதிலை வெளிப்படுத்தியிருந்தார். அந்த வகையில் அஸ்வின் கூறியதாவது : சி.எஸ்.கே அணியின் நலனில் எனக்கும் அக்கறை உள்ளது.

- Advertisement -

உங்கள் எல்லோரையும் விட நான் எனது அணியை மிகவும் நேசிக்கிறேன். 2009 முதல் 2015 ஆம் ஆண்டு வரை இதே அணிக்காக விளையாடி நிறைய பட்டங்களையும் வென்றிருக்கிறேன். இப்படி ஒரு சாம்பியன் அணியை இப்படி பார்க்கையில் எனக்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. இதற்காக மூளையில் உட்கார்ந்து அழ முடியாது. ஆனால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதே எனது குறிக்கோளாக உள்ளது. நான் எனது அணிக்காக கையில் பந்து கொடுத்து வீச சொன்னால் வீசுகிறேன். பேட்டை கொடுத்து பேட்டிங் பண்ண சொன்னால் பண்ணுகிறேன்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் முப்படை தளபதிகளுக்கு கிடைக்கவுள்ள கவுரவம் – பி.சி.சி.ஐ செய்துள்ள ஏற்பாடு

இனிவரும் தொடர்களில் என்னுடைய தவறுகளை சரி செய்து எப்படி பலமாக திரும்ப வேண்டும் என்பதை மட்டுமே யோசித்து வருகிறேன். இந்த ஆண்டு பவர்பிளே ஓவர்களில் நிறைய ரன்களை வழங்கி இருக்கிறேன். ஆனால் அடுத்த முறை பவர்பிளே ஓவர்களில் ரன்களை விட்டுக் கொடுக்காமல் விக்கெட்டுகளை வீழ்த்தும் வகையில் நிச்சயம் கம்பேக் கொடுக்க கடின உழைப்பை வெளிப்படுத்துவேன் என அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement