ரஹானே மற்றும் மொயின் அலி ஆகியோருடன் தனது பெயரையும் பதித்த பேபி ஏ.பி.டி – அசத்தல் சாதனை

Dewald Brevis
- Advertisement -

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 67-வது லீக் போட்டியில் விளையாடிய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இந்த தொடரில் தங்களது கடைசி போட்டியில் விளையாடியிருந்தாலும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி 83 ரன்கள் வித்தியாசத்தில் அவர்களை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தற்போது ஓரளவு சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் நிம்மதி அடைந்திருப்பார்கள்.

ரஹானே மற்றும் மொயின் அலி சாதனையை சமன் செய்த பேபி ஏ.பி.டி :

ஏனெனில் இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்விகளை சந்தித்து வந்த சென்னை அணி கடந்து சில போட்டிகளாகவே இளம் வீரர்களின் வருகையால் மிகச் சிறப்பாக கம்பேக் கொடுத்து வெற்றிகளை பெற்று வருகிறது. தற்போது பலம் வாய்ந்த குஜராத் அணியையும் இன்று சிஎஸ்கே அணி வீசியதன் மூலம் அடுத்த ஆண்டு நல்ல நம்பிக்கையுடன் 2026 ஐபிஎல் தொடரில் பங்கேற்கும்.

- Advertisement -

இன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது குஜராத் அணியை வீழ்த்த சென்னை அணியின் இளம் வீரரான பிரேவிஸ் முக்கிய காரணமாக திகழ்ந்தார். ஏனெனில் இந்த போட்டியின் போது ஐந்தாவது வீரராக களமிறங்கிய அவர் வெறும் 23 பந்துகளை மட்டுமே சந்தித்து 4 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர் என 57 ரன்கள் குவித்து அசத்தினார். சென்னை அணியின் மிடில் ஆர்டரில் யாரும் அதிரடியாக ஆட முடியாமல் தவித்து வந்த வேளையில் அதற்கு தீர்வாக தற்போது பிரேவிஸ் சென்னை அணிக்கு கிடைத்துள்ளார்.

மிடில் ஓவர்களில் அதிரடியாக ஆடும் இவர் அணியின் ரன் குவிப்பையும் வேகப்படுத்துகிறார். ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பேபி ஏ.பி.டி என்று அழைக்கப்படும் பிரேவிஸ் இன்றைய குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் சிஎஸ்கே அணிக்காக ஒரு அசத்தலான சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் படைத்த சாதனை யாதெனில் :

- Advertisement -

சென்னை அணிக்காக இந்த போட்டியில் 19 பந்துகளில் அரைசதம் கடந்த அவர் சி.எஸ்.கே அணிக்காக அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த மொயின் அலி மற்றும் ரஹானே ஆகியோருடன் அந்த இடத்தை பகிர்ந்துள்ளார். ஒட்டுமொத்தமாக சென்னை அணிக்காக அதிவேகமாக அரைசதம் அடித்த வீரராக முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா இருக்கிறார்.

இதையும் படிங்க : அப்படி பாத்தா 22 வயசுலயே ரிட்டையராகிருக்கனும்.. 2026இல் வருவேன் வரவும் மாட்டேன்.. தோனி ட்விஸ்ட் பேட்டி

கடந்த 2014 ஆம் ஆண்டு வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது 16 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார். அதுவே இன்றுவரை சி.எஸ்.கே அணிக்காக அடிக்கப்பட்ட அதிவேக அரைசதமாக இருந்து வருகிறது. அவருக்கு அடுத்து மொயின் அலி மற்றும் அஜின்க்யா ரஹானே ஆகியோர் 19 பந்துகளில் அரைசதம் அடித்து இரண்டாம் இடத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 19 பந்துகளில் அரைசதம் அடித்த பிரேவிஸ் மொயின் அலி மற்றும் ரஹானே ஆகியோருடன் இணைந்து அந்த இரண்டாம் இடத்தை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement