ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 24ஆம் தேதி ஜெய்ப்பூரில் 66வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஏற்கனவே வெளியேறிய டெல்லி டாஸ் வென்று முதலில் பஞ்சாப்புக்கு எதிராக பௌலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப்புக்கு பிரியான்ஸ் ஆர்யா 6 (9) ரன்னில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தார்.
அடுத்து வந்த ஜோஸ் இங்லீஷ் அடித்து நொறுக்கி 32 (12) ரன்கள் எடுத்த போது அவுட்டாக்கிய விப்ராஜ் நிகாம் மறுபுறம் அதிரடியாக விளையாட முயற்சித்த பிரப்சிம்ரன் சிங்கை 28 (18) ரன்களில் அவுட்டாக்கி அசத்தினார். அதனால் 77/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார்.
பஞ்சாப் அசத்தல்:
இருப்பினும் அடுத்ததாக வந்த நேஹல் வதேரா 16, சசாங் சிங் 11 ரன்களில் அவுட்டாகி பின்னடைவைக் கொடுத்தனர். அடுத்த சில ஓவரில் மறுபுறம் அரை சதத்தை அடித்து அசத்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் 53 (34) ரன்களில் அவுட்டானார். ஆனால் அடுத்து வந்த மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் டெத் ஓவர்களில் டெல்லி பவுலர்களை அடித்து நொறுக்கினார்.
குறிப்பாக மோஹித் சர்மா வீசிய 19வது ஓவரில் 6, 4, 0, நோபால் 4, 6, 1 என அடுத்தடுத்த பவுண்டர்களை தெறிக்க விட்டு அவர் 22 ரன்கள் குவித்து அசத்தினார். தொடர்ந்து பட்டாசாக விளையாடிய அவர் 44 ரன்கள் குவித்து ஃபினிஷிங் கொடுத்ததால் 20 ஓவரில் பஞ்சாப் 206/8 ரன்களை எடுத்தது. இதையும் சேர்த்து இந்த வருடம் பஞ்சாப் அணி 7வது முறையாக 200+ ரன்களை குவித்துள்ளது.
உலக சாதனை சமன்:
இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக முறை 200+ ரன்கள் அடித்த அணி என்ற சாதனையை பஞ்சாப் சமன் செய்துள்ளது. இதற்கு முன் குஜராத் அணியும் இதே வருடம் 7 முறை 200+ ரன்கள் அடித்துள்ளது. சொல்லப்போனால் ஒட்டுமொத்தமாக ஒரு டி20 தொடரில் அதிக முறை 200+ ரன்களை அடித்த அணி என்ற உலக சாதனையையும் பஞ்சாப் சமன் செய்துள்ளது.
இதையும் படிங்க: எந்த இடம் குடுத்தாலும் ஓகே.. நோ பிராப்லம்.. டெஸ்ட் அணிக்கு தேர்வானது குறித்து – சாய் சுதர்சன் மகிழ்ச்சி
இதற்கு முன் 2022 டி20 ப்ளாஸ்ட் தொடரில் வேர்விக்ஷைர் அணியும் 7 முறை 200+ ரன்கள் அடித்தது. தற்போது 2025 ஐபிஎல் தொடரில் குஜராத், பஞ்சாப் அணிகள் 200+ ரன்களை அடித்து அந்த சாதனையை சமன் செய்துள்ளது. டெல்லி அணிக்கு அதிகபட்சமாக விப்ராஜ் நிகாம், குல்தீப் யாதவ் தலா 2, முஸ்தபீசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.



