உங்களை மாதிரி ஒரு வீரர் கிடைப்பது கஷ்டம்..ப்ளீஸ் அதை மட்டும் மாத்தாதீங்க.. ரிஷப் பண்டிற்கு – அஜய் ஜடேஜா கோரிக்கை

Ajay Jadeja
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற மெகா ஏலத்தில் 27 கோடி ரூபாய் என்கிற அதிகபட்ச விலைக்கு வாங்கப்பட்ட ரிஷப் பண்ட் இந்த ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். பெரிய தொகைக்கு ஏலம் போனதால் அவரது ஆட்டம் மீது அனைவரது மத்தயிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.

யாருக்காகவும் உங்க ஆட்டத்தை மாத்தாதீங்க : அஜய் ஜடேஜா

ஆனால் இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள ரிஷப் பண்ட் 12 போட்டிகளில் விளையாடி 150 ரன்கள் கூட அடிக்கவில்லை. அதிலும் குறிப்பாக அதிரடி ஆட்டக்காரராக பார்க்கப்படும் இவரது ஸ்ட்ரைக் ரேட் 100 ரன்களுக்கு கீழ் இருப்பதால் அவரது இந்த மோசமான ஆட்டம் ரசிகர்களை தாண்டி அந்த அணியின் நிர்வாகத்திலும் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் ரிஷப் பண்ட் தொடர்ச்சியாக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்தாலும் தனது வழக்கமான அணுகுமுறையை யாருக்காகவும், எதுக்காகவும் மாற்றிக் கொள்ளக் கூடாது என முன்னாள் இந்திய வீரரான அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

ரிஷப் பண்ட் மற்ற வீரர்களை விட வித்தியாசமான பேட்டிங் முறையை கொண்டவர். அதுதான் அவருடைய தனித்தவம். ஐபிஎல் சீசனில் நிறைய வீரர்கள் விளையாடுகிறார்கள். சாதாரண முறையில் பேட்டிங் செய்வதற்கு 1500 வீரர்கள் வெளியில் இருக்கிறார்கள். ஆனால் அவரைப் போல தனித்துவமான முறையில் பேட்டிங் செய்யும் வீரர்கள் சிலரே இருக்கின்றனர்.

- Advertisement -

எனவே ரிஷப் பண்ட் தன்னுடைய ஸ்டைலை யாருக்காகவும் எதற்காகவும் மாற்றிக் கொள்ளக் கூடாது. பெரிய தொகைக்கு வாங்கப்பட்டதால் தான் அவர் இந்த சீசனில் அழுத்தத்தில் மாட்டிக் கொண்டார் என்று யார் கூறினாலும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஏனெனில் அவர் பல சீசன்களாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இதையும் படிங்க : உங்களால் முடியாது என்று சொல்லி வெளியேறுங்கள்.. தோனியை காட்டமாக விமர்சித்த – சீக்கா ஸ்ரீகாந்த்

இந்த சீசன் அவருக்கு சரியாக அமையவில்லை என்பதற்காக அவர் அழுத்தத்தில் இருக்கிறார் என்றெல்லாம் அர்த்தம் கிடையாது. மீண்டும் தன்னுடைய அதிரடியான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்த வேண்டும் என அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.

Advertisement