சுதர்சன் இந்தியாவின் ஆல் ஃபார்மட் பிளேயரா வருவாரு.. அந்த இரண்டையும் சேத்து காட்டுறாரு.. சேவாக் பாராட்டு

Virender Sehwag
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று சாதனை படைத்தது. இந்த வருடம் சுப்மன் கில் தலைமையில் அசத்தி வரும் அந்த அணி 9 வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஜொலித்து வருகிறது. அந்த அணியின் இந்த வெற்றிக்கு தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்.

பேட்டிங் துறையில் துவக்க வீரராக விளையாடும் அவர் இதுவரை 617* ரன்களை குவித்துள்ளார். அதனால் விராட் கோலி, சூரியகுமார் உள்ளிட்ட நட்சத்திரங்களை முந்தியுள்ள அவர் அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்து ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். குறிப்பாக டெல்லிக்கு எதிரான போட்டியில் சதத்தை அடித்த சுதர்சன் 108* ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

ஆல் ஃபார்மட் பிளேயர்:

இந்நிலையில் இந்த வருடம் சாய் சுதர்சனை ஏன் 8.50 கோடிக்கு தக்க வைத்தீர்கள் என்று குஜராத் பயிற்சியாளர் நெஹ்ராவிடம் கேட்டதாக ஜாம்பவான் வீரேந்திர் சேவாக் தெரிவித்துள்ளார். அப்போது விரைவில் இந்தியாவுக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடப் போகும் சுதர்சனை விட்டால் பிடிக்க முடியாது என்று கருதி தக்க வைத்ததாக நெஹ்ரா சொன்னதாக சேவாக் கூறியுள்ளார். தற்போது அதை சுதர்சன் நிரூபித்துள்ளதாகவும் சேவாக் பாராட்டியுள்ளார்.

மேலும் டி20 கிரிக்கெட்டில் டெஸ்ட் போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். அதே சமயம் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் குவிக்க முடியும் என்ற இரண்டையும் சுதர்சன் ஒன்றாக காட்டுவதாகவும் சேவாக் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சாய் சுதர்சன் தக்க வைக்கப்பட்டது பற்றி நான் ஆசிஸ் நெஹ்ராவிடம் கேட்டேன். ஏனெனில் அணியிலிருந்து விடுவித்தால் ஏலத்தில் அவரை குறைந்த விலைக்கு வாங்க முடியும் என்று நான் நினைத்தேன்”

- Advertisement -

சேவாக் பாராட்டு:

“ஆனால் அடுத்த வருடம் சாய் சுதர்சன் இந்தியாவுக்காக 3 வகை அணி கிரிக்கெட்டிலும் விளையாடுவார் என்று நெஹ்ரா என்னிடம் சொன்னார். என்னுடைய நண்பன் சொன்னது சரியானது. இப்போது தான் சுதர்சன் மீது ஏன் குஜராத் இவ்வளவு முதலீடு செய்துள்ளது என்பதை நான் உணர்கிறேன். க்ளாஸ் பேட்ஸ்மேனாக தெரியும் அவருக்கு நீண்ட கேரியர் காத்திருக்கிறது”

இதையும் படிங்க: 2 பேருக்கு மட்டும் 48 கோடி கொடுத்தா எப்படி ஜெய்க்க முடியும்.. லக்னோ தவறை விளாசிய ஃகைப், டாம் மூடி

“டி20 போட்டிகளில் டெஸ்ட் கிரிக்கெட் போல ஆட முடியும். அதே சமயம் டி20 கிரிக்கெட் போல ஸ்ட்ரைக் ரேட்டையும் வைத்திருக்க முடியும் என்பதை சாய் சுதர்சன் நிரூபித்துள்ளார். இந்தியாவுக்காக அவர் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடத் தகுதியானவர்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வு பெற்றுள்ளதால் சுதர்சனுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

Advertisement