ஏலத்தில் வாங்குன அவங்க மிஸ்ஸாகலன்னா.. இந்நேரம் லக்னோ பிளே ஆஃப் போய்ருக்கும்.. ரிஷப் பண்ட் பேட்டி

Rishabh pant 2
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 61வது போட்டியில் லக்னோவை 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் தோற்கடித்தது. மே 19ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ 206 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக மிட்சேல் மார்ஷ் 65, ஐடன் மார்க்ரம் 61, நிக்கோலஸ் பூரான் 45 ரன்கள் எடுத்தனர்.

அதைத் துரத்திய ஹைதராபாத்துக்கு அபிஷேக் சர்மா 59, இஷான் கிசான் 35, ஹென்றிச் க்ளாஸென் 47, கமிண்டு மெண்டிஸ் 32 ரன்கள் குவித்தனர். அதனால் 18.2 ஓவரிலேயே 206/4 ரன்களை எடுத்த ஹைதராபாத் தங்களுடைய 4வது வெற்றியைப் பெற்றது. மறுபுறம் திக்வேஷ் ரதி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் 7வது தோல்வியை சந்தித்த லக்னோ பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

- Advertisement -

தோல்விக்கான காரணம்:

இந்நிலையில் ஏலத்தில் தாங்கள் திட்டமிட்டு வாங்கிய சில முக்கியமான பவுலர்கள் காயத்தால் விலகியதே இந்த வருடம் தோல்வியை சந்திக்க காரணம் என்று லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் கூறியுள்ளார். மேலும் இந்தப் போட்டியில் 7 (6) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்த அவர் எக்ஸ்ட்ரா 10 ரன்களை எடுக்கத் தவறியதே தோல்வியைக் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இது பற்றி ரிஷப் பண்ட் பேசியது பின்வருமாறு.

“காயம் காரணமாக எங்களுடைய அணியில் இருக்கும் இடைவெளிகளை நாங்கள் நிரப்ப வேண்டியிருந்தது என்பது எங்களுக்குத் தெரியும். ஒரு அணியாக அதைப் பற்றி நாங்கள் பேசக்கூடாது என்று முடிவெடுத்துள்ளோம். ஏலத்தில் நாங்கள் திட்டமிட்ட பவுலர்களுடன் விளையாடியிருந்தால் கதை வேறு மாதிரி இருந்திருக்கும்”

- Advertisement -

பிளே போய்ருப்போம் ஆனா:

“சில நேரங்களில் விஷயங்கள் உங்கள் வழியில் செல்லும். சில நேரங்களில் செல்லாது. எனவே நாங்கள் இதுவரை விளையாடிய விதத்தில் பெருமையை எடுத்துக் கொள்கிறோம். மேலும் இந்த வருடம் கிடைத்த நேர்மறையான விஷயங்களைப் பார்க்கிறோம். எங்களிடம் வலுவான பேட்டிங் இருக்கிறது. சொல்லப்போனால் சில நேரங்களில் பவுலர்களும் சிறப்பாக பவுலிங் செய்த இடங்கள் இருந்தன”

இதையும் படிங்க: என்கிட்ட மோதாத.. திக்வேஷ் – அபிஷேக் சர்மா மெகா சண்டை.. ராஜிவ் சுக்லா தலையீடு.. நடந்தது என்ன?

“அதை வைத்து நாங்கள் சிறந்த செயல்பாடுகளை கொடுக்க முயற்சி செய்தோம். நாங்கள் 10 ரன்கள் குறைவாக எடுத்தோம் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் வெற்றிக்காக நல்ல இடங்களில் இருந்தும். ஆனால் அப்போது வெற்றிகரமாக முடிக்கவில்லை. திக்வேஷ் ரதி மிகவும் சிறப்பாக பௌலிங் செய்ய வந்தார். இது அவருக்கு முதல் வருடம். ஆனால் முதல் வருடத்திலேயே அவர் பவுலிங் செய்த விதத்தைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது. அவர் எங்களுடைய நேர்மறையான விஷயங்களில் ஒருவர்” என்று கூறினார்.

Advertisement