விராட் கோலிக்கு அடுத்து இரண்டாவது வீரராக ஐ.பி.எல் வரலாற்றில் மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் – ரோஹித் சர்மா

Rohit and Kohli
- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா நடப்பு 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மேலும் 79 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் ஆர்.சி.பி வீரர் விராட் கோலிக்கு அடுத்து இரண்டாவது வீரராக ஐபிஎல் வரலாற்றில் மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார். அதுகுறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த ரோகித் சர்மா மோசமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தி இருந்தார்.

ரோஹித் சர்மா நிகழ்த்த காத்திருக்கும் மாபெரும் சாதனை :

ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது 45 பந்துகளில் 76 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்த அவர் மும்பை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் பிரமாண்டமான வெற்றிக்கும் அழைத்துச் சென்றார். அதற்கு அடுத்து தற்போது அவர் விளையாடியுள்ள நான்கு போட்டிகளில் மூன்று அரைசதங்களுடன் மீண்டும் அவர் பர்மிற்கு திரும்பியுள்ளார்.

- Advertisement -

இதன் காரணமாக மும்பை அணியும் தற்போது பலமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெளிப்படுத்தி கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதி செய்ய நெருங்கியுள்ளது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளில் தோல்வியை சந்தித்த மும்பை அணி அடுத்ததாக விளையாடிய 7 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதில் ரோகித் சர்மாவின் பங்கும் உண்டு என்றால் அதுமிகையல்ல.

இந்த தொடரில் அவர் இதுவரை விளையாடியுள்ள 11 ஆட்டங்களில் 32 ரன்கள் சராசரியுடன், 155 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 293 ரன்களை குவித்துள்ளார். இந்நிலையில் ஒட்டுமொத்தமாகவே 262 ஐ.பி.எல் இன்னிங்ஸில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 6921 ரன்களை குவித்திருக்கும் வேளையில் மேலும் 79 ரன்களை குவிக்கும் பட்சத்தில் ஐபிஎல் போட்டிகளில் 7000 ரன்களை எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார்.

- Advertisement -

ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலி அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 8509 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கும் வேளையில் ரோகித் சர்மா தற்போது 7000 ரன்களை நெருங்கியுள்ளார். இந்த தொடரின் மூன்று லீக் ஆட்டங்கள் மும்பை அணிக்கு எஞ்சியுள்ள வேளையில் இன்று குஜராத் அணிக்கு எதிராக மும்பை அணி விளையாட இருக்கும் போட்டியிலேயே அவர் அந்த சாதனையை நிகழ்த்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் எதிர்காலம் குறித்து மவுனம் கலைத்த கவுதம் கம்பீர் – என்ன சொன்னார் தெரியுமா?

நடப்பு 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியானது 7 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 3 ஆவது இடத்தில் இருக்கும் வேளையில் இன்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement