2008-ல் டெல்லி அணியால் விராட் கோலி தேர்வு செய்யப்படாதது ஏன்? – வீரேந்தர் சேவாக் கொடுத்த விளக்கம்

Sehwag and Kohli
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 17 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் இந்த ஆண்டு 2025 சீசனுக்கான 18-வது ஐபிஎல் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

விராட் கோலியை டெல்லி அணி தேர்வு செய்யாதது ஏன்? : சேவாக் விளக்கம்

இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் பலரும் பங்கேற்று விளையாடி வரும் இந்த தொடரில் கடந்த 18 ஆண்டுகளாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக மட்டுமே விளையாடி வரும் விராட் கோலி ஐபிஎல் தொடரில் ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். அதேவேளையில் எந்தவொரு ஆண்டும் அவர் ஆர்.சி.பி அணியால் நிராகரிக்கப்படாமல் தொடர்ச்சியாக அந்த அணியுடன் மட்டுமே விளையாடி வருகிறார்.

- Advertisement -

டெல்லியை பூர்வீகமாக கொண்ட அவர் ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் டெல்லி அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அப்போதைய டெல்லி அணியின் கேப்டன் சேவாக் விராட் கோலிக்கு பதிலாக பிரதீப் சங்வானை நேரடியாக அணியில் எடுத்திருந்தார். இதன் காரணமாக 2008-ஆம் ஆண்டு டெல்லி அணியில் இடம்பெறாத அவர் பெங்களூரு அணியால் வாங்கப்பட்டார்.

பின்னர் தொடர்ச்சியாக ஆர்.சி.பி அணிக்காக மட்டுமே விளையாடி வரும் அவரை துவக்க காலகட்டத்தில் புறக்கணித்தது ஏன்? என்பது குறித்து தற்போது வீரேந்திர சேவாக் வெளிப்படையான சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : 2008 ஆம் ஆண்டு டெல்லி அணியில் ஏகப்பட்ட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிறைந்திருந்தார்கள். நான், கம்பீர், ஷிகர் தவான், தில்ஷான் போன்றவர்கள் இருந்தோம்.

- Advertisement -

அதேபோன்று அப்போது ஏபிடி வில்லியர்ஸும் எங்களது அணியில்தான் இருந்தார். அப்போதைய டாப் ஆர்டரில் விராட் கோலி எங்களுக்கு தேவைப்படவில்லை. அதே சமயத்தில் பந்துவீச்சாளர்கள் வரிசையில் வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை என்பதாலேயே இடதுகை வேகப்பந்து வீச்சாளரான பிரதீப் சங்வானை நேரடியாக தேர்ந்தெடுத்தோம். அவரும் யோ மகேஷும் சிறப்பாக செயல்பட்டார்கள் என சேவாக் கூறியிருந்தார்.

இதையும் படிங்க : நம்பமுடியாத ஒரு ஆட்டம்.. இன்னும் பல ஆண்டுகள் இதை செய்வார்னு நம்புறேன்.. சூர்யவன்ஷியை பாராட்டிய – ஜெய்ஸ்வால்

2008 ஆம் ஆண்டு விராட் கோலியை டெல்லி அணி தவறவிட்டாலும் அவரை கச்சிதமாக கையில் எடுத்த பெங்களூரு அணி இன்று வரை அவரை வெளிவிடாமல் தங்களது அணியின் நட்சத்திர வீரராக விளையாட வைத்து வருகிறது. கடந்த 2008-ஆம் ஆண்டு புதுமுக வீரராக ஆர்.சி.பி அணியில் அறிமுகமான விராட் கோலி இன்று அந்த அணியின் அடையாளமாகவே மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement