டெல்லி அணியின் பிளேயிங் லெவனில் நடராஜன் இடம்பெறாதது ஏன்? – கிண்டலாக பதிலளித்த கெவின் பீட்டர்சன்

Nattu and Pietersen
- Advertisement -

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடியிருந்த தமிழக வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தாலும் அந்த அணி அவரை வெளியேற்றியது. பின்னர் மெகா ஏலத்தில் கலந்து கொண்ட அவரை டெல்லி கேபிட்டல்ஸ் அணி பெரிய போட்டிக்கு மத்தியில் 10 கோடியே 75 லட்ச ரூபாய் என்கிற மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுத்து தங்களது அணியில் இணைத்தது.

நடராஜனை எங்கு விளையாட வைப்பது? : கிண்டலாக பதிலளித்த பீட்டர்சன்

இதன் காரணமாக டெல்லி அணிக்காக முதன்மை வேகப்பந்து வீச்சாளராக நடராஜன் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் மிட்சல் ஸ்டார்க் உடன் இணைந்து நடராஜன் விளையாட இருந்ததால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிலும் இருந்தது. ஆனாலும் காயம் காரணமாக நடராஜனால் ஆரம்ப கட்ட போட்டிகளில் விளையாட முடியவில்லை.

- Advertisement -

இதன் காரணமாக மிட்சல் ஸ்டார்க், மோகித் சர்மா, முகேஷ் குமார் மற்றும் சமீரா ஆகிய வீரர்களே அந்த அணியால் தற்போது வரை பயன்படுத்த வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய பெங்களூரு அணிக்கு எதிரான போட்டிக்கு பின்பு டெல்லி அணியின் ஆலோசகரான கெவின் பீட்டர்சனிடம் தமிழக வீரரான நடராஜன் ஏன் பிளேயிங் லெவனில் செய்யப்படவில்லை? என்றும் அவர் எப்போது விளையாடுவார்? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

அதற்கு கிண்டலாக பதிலளித்த கெவின் பீட்டர்சன் : நடராஜனை தற்போது எங்களால் தேர்வு செய்ய முடியவில்லை. எந்த இடத்தில் அவரை தேர்வு செய்ய முடியும்? என்று நீங்களே சொல்லுங்கள் என ஏளனமான பதிலை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஒருபுறம் மிகச் சிறப்பான யார்க்கர் பந்துவீசும் திறமை இருந்தும், தமிழக பயிற்சியாளர் டெல்லி அணியில் இருந்தும் அவருக்கு வாய்ப்பு வழங்காதது ஏமாற்றத்தை அளித்து வரும் வேளையில் அந்த அணியின் ஆலோசகரான கெவின் பீட்டர்சன் இப்படி பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : முன்னேறிய ராகுலை இந்திய டி20 அணியில் அந்த இடத்தில் விளையாடத் வைங்க.. கெவின் பீட்டர்சன் ஆதரவு

கடைசியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தோல்வியடைந்த டெல்லி அணி தற்போது 12 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் 6 ஆவது இடத்தில் உள்ளது. மேலும் டெல்லி அணி தங்களது அடுத்த போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement