ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று சொந்த மண்ணில் நடைபெற்ற நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் போட்டியில் விளையாடிய அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது சூப்பர் ஓவர் வரை சென்று அந்த அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பெற்றது. மேலும் இந்த தொடரில் வெற்றிநடை போட்டு வரும் டெல்லி கேபிட்டல்ஸ் அணி இதுவரை தாங்கள் விளையாடிய 6 போட்டிகளில் 5 வெற்றிகளோடு புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்றுள்ளது.
ஸ்டார்க் ஒரு மிகப்பெரிய லெஜண்ட் – அக்சர் படேல் பாராட்டு :
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 188 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 188 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. பின்னர் சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் அணி 11 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய டெல்லி அணி 4 பந்துகளில் 13 ரன்கள் குவித்து சூப்பர் ஓவரில் டெல்லி அணி அசத்தலான வெற்றியை பெற்றிருந்தது.
இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த வெற்றிக்கு பிறகு பேசிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் கூறுகையில் : இந்த போட்டி மிகச் சிறப்பாக முடிவடைந்ததில் மகிழ்ச்சி. நாங்கள் இந்த போட்டியை துவங்கிய போதிலிருந்து அனைத்து விதத்திலும் சிறப்பாக செயல்பட்டோம். இந்த போட்டியின் ஆரம்பத்திலேயே நாங்கள் அதிரடியாக விளையாட நினைத்தாலும் 12-வது ஓவருக்கு பிறகு தான் எங்களுக்கு முமென்ட்டம் கிடைத்தது.
அதன் பிறகு பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பாக ரன் குவித்தனர். அதேபோன்று பந்துவீச்சிலும் நாங்கள் மைதானத்தில் உள்ள தன்மையை சரியாக கணக்கில் வைத்து சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறோம். ஒரு கேப்டனாக இது போன்ற வெற்றி உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
ஏனெனில் இந்த வெற்றியின் போது நான் பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலுமே பங்களிப்பை வழங்கியுள்ளது நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு கேப்டனாக அணிக்கு நாம் நமது பங்களிப்பை வழங்கினால்தான் வீரர்களுக்கும் அது உத்வேகத்தை அளிக்கும். மிட்சல் ஸ்டார்க் வீசிய கடைசி ஓவர் அவர் எவ்வளவு பெரிய வீரர் என்பதை காட்டுகிறது.
இதையும் படிங்க : ஒரே ஆளா நின்னு எங்களை தோக்கடிச்சிட்டாரு.. தோல்விக்கு பிறகு டெல்லி அணி வீரரை – பாராட்டிய சஞ்சு சாம்சன்
இந்த போட்டியில் அவர் கிட்டத்தட்ட 12 யார்க்கர் பந்துகளை வீசியுள்ளார். இந்த ஒரு விடயமே அவர் ஆஸ்திரேலிய அணியின் லெஜெண்டாக இருப்பதற்கு சான்று. அவரே இந்த போட்டியில் எங்களுக்கு வெற்றியை கொண்டு வந்துள்ளார் என அக்சர் படேல் கூறியது குறிப்பிடத்தக்கது.



