இந்த ரெசிபியை மாத்த விரும்பல.. 245 ரன்களை சேசிங் செய்து வெற்றி பெற்றது குறித்து பேசிய – பேட் கம்மின்ஸ்

Pat Cummins
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் போட்டியானது நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்த அதிரடி இனிவரும் போட்டிகளிலும் தொடரும் : பேட் கம்மின்ஸ்

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் என்கிற பிரமாண்ட ரன் குவிப்பை வழங்கியது. பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பாக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களையும், பிரப்சிம்ரன் சிங் 42 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 246 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது துவக்கத்தில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 247 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் அணி சார்பாக அபிஷேக் ஷர்மா 141 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 66 ரன்களையும் குவித்து அசத்தினர்.

சன் ரைசர்ஸ் அணி பெற்ற இந்த பிரமாதமான வெற்றி பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த வெற்றி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டி அற்புதமாக இருந்தது. நிச்சயம் இந்த இலக்கை எங்களுடைய ஸ்டைலில் எட்ட முடியும் என்று நினைத்தோம்.

- Advertisement -

ஏனெனில் இது ஒரு நல்ல பேட்டிங் விக்கெட் அதுமட்டுமின்றி எங்களுடைய சொந்த மைதானமும் இது என்பதனால் ரசிகர்களின் ஆதரவும் பிரமாதமாக இருந்தது. இந்த மைதானத்தில் ஒரு ஓவருக்கு 10 ரன்களுக்கு குறைவாக வீசினாலே அது பவுலரின் வெற்றி தான் என்று கூறுவேன். இந்த சேசிங்கை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்று நம்பினோம். இந்த இன்னிங்ஸ்க்கு பிறகு நான் அபிஷேக் சர்மாவின் மிகப்பெரிய ரசிகராக மாறிவிட்டேன். இந்த ஆட்டத்தை தான் நாங்கள் இனியும் தொடர இருக்கிறோம். இந்த சேஸிங்கில் இருந்து எந்த ஒரு ரெசிபியையும் நாங்கள் மாற்ற விரும்பவில்லை.

இதையும் படிங்க : சிரிப்பா வருது.. அதை நான் சரியா பண்ணல.. 245 அடிச்சும் ஜெய்க்க முடியாம போக இதான் காரணம்.. ஸ்ரேயாஸ் பேட்டி

இதேபோன்ற அதிரடியான ஆட்டத்தை தான் நாங்கள் இனிவரும் போட்டிகளில் வெளிப்படுத்தப்போகிறோம். ஒரு பேட்டிங் யூனிட்டாக கடந்த ஆண்டும் சரி இந்த ஆண்டும் சரி மிகச் சிறப்பான பல இன்னிங்ஸ்களை விளையாடியுள்ளோம். இதுபோன்ற சிறப்பான இன்னிங்ஸ்கள் எங்களுக்கு நம்பிக்கையை அளிக்கின்றன. இனிவரும் போட்டிகளிலும் எங்களது இந்த அதிரடி தொடரும் என பேட் கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement