தோனி இருந்தா மட்டும் சாதிச்சுருப்பாரா? சிஎஸ்கே மண்ணை கவ்வி 11.30 மணிக்கு வருவோம்.. கலாய்த்த சேவாக்

Virender Sehwag csk
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 11ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் 25வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் சென்னையை அதன் சொந்த மண்ணில் கொல்கத்தா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய சென்னை 20 ஓவரில் மோசமாக விளையாடி 103/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதைத் துரத்திய கொல்கத்தா அதே பிட்ச்சில் சென்னை பவுலர்களை அடித்து நொறுக்கி 10.1 ஓவரில் 107/2 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. அதனால் கொல்கத்தா தங்களது மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்த நிலையில் சென்னை தொடர்ந்து ஐந்தாவது தோல்வியைப் பதிவு செய்தது. இதனால் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக தொடர்ந்து 5 போட்டிகளில் சென்னை தோற்றுள்ளது.

- Advertisement -

சர்ச்சை அவுட்:

அத்துடன் தங்களுடைய கோட்டையாக கருதப்படும் சேப்பாக்கம் மைதானத்தில் முதல் முறையாக சென்னை தொடர்ந்து 3 போட்டிகளில் 3 தோல்விகளை பதிவு செய்த புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்திற்கு விழுந்துள்ளது. முன்னதாக அந்தப் போட்டியில் 9வது இடத்தில் களமிறங்கிய கேப்டன் தோனி ஒரு ரன்னில் சுனில் நரைன் சுழலில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் அதை தோனி ரிவ்யூ செய்தார்.

அப்போது அவருடைய பேட்டில் பந்து லேசாக உரசுவது போல அல்ட்ரா எட்ஜ் தொழில்நுட்பத்தில் காண்பிக்கப்பட்டது. அதனால் தோனி தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3வது நடுவர் மீண்டும் அவுட் வழங்கியது சிஎஸ்கே ரசிகர்களை ஏமாற்றத்தைக் கொடுத்தது. இந்நிலையில் ஒருவேளை அங்கே நாட் அவுட் வழங்கி தோனி இன்னும் கொஞ்சம் விளையாடி 30 ரன்கள் எக்ஸ்ட்ரா எடுத்திருந்தால் சிஎஸ்கே வெற்றிக்கு போராடும் வாய்ப்பு கிடைத்திருக்குமா என்று வீரேந்திர சேவாக்கிடம் கேட்கப்பட்டது.

- Advertisement -

கலாய்த்த சேவாக்:

அதற்கு 20 ஓவர்கள் வரை தோனி நிலைத்து நின்று விளையாடிருந்தால் கூட ஒன்றும் சாதித்திருக்க முடியாது என்று சேவாக் தெரிவித்தார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “கண்டிப்பாக எந்த மாற்றமும் நிகழ்ந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஒருவேளை தோனி அவுட்டாகாமல் விளையாடியிருந்தால் சிஎஸ்கே அதிகபட்சம் 130 ரன்கள் தொட்டிருப்பார்கள்”

இதையும் படிங்க: டெஸ்ட் மேட்ச்க்கு ரிஹர்ஸ்செல் பாக்குறீங்களா? ருதுராஜ் பதில் அந்த இளம் வீரரை சேருங்க.. ஸ்ரீகாந்த் விளாசல்

“104 இலக்கை கொல்கத்தா 10.5 ஓவரில் (10.1) சேசிங் செய்தார்கள். ஒருவேளை தோனி 20 ஓவர்கள் விளையாடி இருந்தால் இந்த நிகழ்ச்சியில் நாம் 10.30க்கு பதிலாக 11.30 மணிக்கு பேச வந்திருப்போம். மற்ற படி வெற்றியில் வித்தியாசம் ஏற்பட்டிருக்காது” என்று தோனி முழுமையாக விளையாடியிருந்தால் மட்டும் சாதித்து விடுவாரா? என சேவாக் கலாய்த்தார்.

Advertisement