ஃபவரான தோனி தனியாளா 3.. மொத்த சிஎஸ்கே வெறும் 5.. தோனி இதை செஞ்சுருந்தா ஜெய்ச்சுருக்கலாம்.. சைமன் டௌல்

Simon Doull
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் போட்டியில் மும்பைக்கு எதிராக வென்றது. ஆனால் அதற்கடுத்த 4 போட்டிகளில் தொடர்ந்து 4 தோல்விகளை சந்தித்துள்ள சென்னை புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் விழுந்துள்ளது. குறிப்பாக ஏப்ரல் எட்டாம் தேதி நடைபெற்ற பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் சென்னை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் பிரியான்ஸ் ஆர்யா 103 ரன்கள் எடுத்த உதவியுடன் 220 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய சென்னைக்கு ரச்சின் ரவீந்திரா 36, ருதுராஜ் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். சிவம் துபே 42 ரன்னில் அவுட்டாகி ஃபினிஷிங் செய்யத் தவறினார்.

- Advertisement -

தோனி போராட்டம்:

நங்கூரமாக விளையாடிய கான்வே 69* (49) ரன்கள் எடுத்த போதிலும் அதிரடியாக விளையாடத் தவறியதால் ரிட்டையர்டு அவுட்டாகி சென்றார். கடைசியில் தோனி அதிரடியாக 27 (12) ரன்கள் எடுத்தும் ஃபினிஷிங் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியேறினார். அதனால் வழக்கம் போல இந்தப் போட்டியிலும் சிஎஸ்கே தோல்வியை சந்திக்க தோனியே காரணம் என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் கிண்டல்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில் இந்தப் போட்டியில் தோனி தனியாளாக 3 சிக்ஸர்கள் அடித்த நிலையில் மற்ற சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் சேர்ந்து 5 சிக்ஸர்கள் அடித்ததாக முன்னாள் நியூஸிலாந்து வீரர் சைமன் டௌல் தெரிவித்துள்ளார். அந்த வகையில் சிஎஸ்கே அணியில் தோனியைத் தவிர யாரும் பவர் ஹிட்டிங் செய்யாததே தோல்விக்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் தோனி 4வது இடத்தில் வந்திருந்தால் சென்னை வெற்றி பெற்றிருக்கக்கூடும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

டௌல் கருத்து:

“தோனி 12 பந்தில் 3 சிக்ஸர்கள் அடித்தார் மற்ற அணி சேர்ந்து 5 சிக்ஸர்கள் அடித்தனர். இது தோனியிடம் இப்போதும் அந்த அதிரடியான சிக்சர்களைப் பறக்க விடும் திறமை இருப்பதைக் காட்டுகிறது. அதனாலேயே அவர் பேட்டிங்கில் மேலே வந்து விளையாடுவதைப் பற்றி நாம் பேசினோம். 2வது விக்கெட் விழுந்த போது களமிறங்கி 12 பந்தில் 27 ரன்களை எடுத்திருந்தால் இன்னும் வித்தியாசம் ஏற்பட்டிருக்கும்”

இதையும் படிங்க: எனக்கா அபராதம் போடுறீங்க.. பி.சி.சி.ஐ-யை டீசிங் செய்யும் விதமாக விக்கெட் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட – திக்வேஷ் ரதி

“இருப்பினும் இது தோனியின் தவறல்ல. கான்வேயை ரிட்டையர்டு அவுட் செய்த முடிவு சுவாரசியமானது. இந்த பிட்ச்சில் வேகம் இருந்தும் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருந்தது. 190 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட வேண்டிய அவர் 140இல் விளையாடி தடுமாறினார். அவருக்கு பதில் ஜடேஜா வந்தது தாமதமான முடிவு. ஆனால் தோனி 3 – 4வது இடத்தில் வந்து 27 (12) ரன்களை எடுத்திருந்தால் போட்டியில் வித்தியாசம் ஏற்பட்டிருக்கும். 14 ரன்ரேட் தேவைப்பட்ட சூழ்நிலையில் அவர் மிகவும் தாமதமாக வந்தார்” என்று கூறினார்.

Advertisement