75% சம்பளம் அபராதத்தை கொடுத்த திக்வேஷ் கொண்டாடத்தின் பின்னணி என்ன? பூரானிடம் விளக்கிய ரிஷப் பண்ட்

Digvesh Rathi
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் 2வது வாரத்தைக் கடந்து வெற்றிகரமாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் 2 வெற்றி 2 தோல்விகளை சந்தித்துள்ளது. அந்த அணியின் இளம் ஸ்பின்னர் திக்வேஷ் சிங் ரதி பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் பிரியான்ஸ் ஆர்யா விக்கெட்டை எடுத்தார்.

அப்போது பெவிலியன் நோக்கி ஏமாற்றத்துடன் சென்று கொண்டிருந்த ஆர்யாவிடம் ஓடிய அவர் தமது கையில் ஏதோ எழுதி வெளியே போ என்ற வகையில் விக்கெட்டை கொண்டாடினார். ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் வீரர் கேஸ்ரிக் வில்லியம்ஸ் இதே போல செய்ததற்கு விராட் கோலி பதிலடிக் கொடுத்ததை மறக்க முடியாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இதெல்லாம் தேவையா? என்று அவரை ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் விமர்சித்தார்.

- Advertisement -

டெல்லிகாரன்னா அப்படித் தான்:

மேலும் அப்படி கொண்டாடியதற்காக ஐபிஎல் நிர்வாகம் அவருக்கு 25% போட்டி சம்பளத்தை அபராதமாகவும் 2 கருப்பு புள்ளியையும் தண்டனையாக வழங்கியது. அதனால் திருந்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட திக்வேஷ் மும்பைக்கு எதிரானப் போட்டியில் விக்கெட்டை எடுத்த போது மீண்டும் அப்படியே கொண்டாடினார். இருப்பினும் அந்தப் போட்டியில் பேட்ஸ்மேன் அருகே சென்று கொண்டாடாத அவர் இருந்த இடத்திலேயே கொண்டாடினார்.

அதனால் அந்தப் போட்டியில் அவருக்கு அபராதம் எதுவும் விதிக்கப்படாது என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மீண்டும் அவ்வாறு கொண்டாடியதால் அவருக்கு ஐபிஎல் நிர்வாகம் 50% அபராதம் மற்றும் 2 கருப்புப் புள்ளிகளை தண்டனையாக வழங்கியது. அது ஒருபுறமிருக்க மும்பைக்கு எதிரானப் போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்த திக்வேஷ் ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார்.

- Advertisement -

கொண்டாட்டத்தின் பின்னணி:

அப்போது சுனில் நரைன் தமது ரோல் மாடல் என்றும் அவரைப் பார்த்து பௌலிங் செய்வதாகவும் திக்வேஷ் கூறினார். இந்நிலையில் லக்னோ அணி அடுத்ததாக கொல்கத்தாவுக்கு எதிராக விளையாட உள்ளது. அப்போடிக்கு முன்பாக தம்முடைய ரோல் மாடல் சுனில் நரைனை சந்திக்க அழைத்துச் செல்லுமாறு திக்வேஷ் கேப்டன் ரிஷப் பண்ட்டிடம் சொன்னார்.

அவரை அழைத்துச் சென்ற ரிஷப் பண்ட் “இவர் தான் அவர். ஒவ்வொரு நாளும் உங்களைப் பார்த்து தான் அனைத்தும் செய்வதாக சொல்கிறார்” என்று நரைனிடம் சொல்லி திக்வேஷை அறிமுகப்படுத்தினார். அதற்கு அருகே அமர்ந்திருந்த நிக்கோலஸ் பூரான் “சரி சொல்லுங்கள். நரைன் இப்படியெல்லாம் கொண்டாட மாட்டார். நீங்கள் ஏன் கொண்டாடுகிறீர்கள்?” என்று கேட்டார்.

இதையும் படிங்க: பேட்டிங்கை விட இதான் மோசம்.. இந்த டீமை வெச்சுகிட்டு ஹைதராபாத் கோப்பை ஜெய்க்க முடியாது.. ராயுடு விமர்சனம்

அதற்கு “நான் (எதற்கும் அஞ்சாத) டெல்லியைச் சேர்ந்தவன்” என்று திக்வேஷ் சொன்னதைக் கேட்டு பண்ட், நரைன், பூரான் ஆகியோர் வாய்விட்டு சிரித்தனர். இறுதியில் “திக்வேஷ் டிக்கெட் கலெக்டர். நரைன் விக்கெட் கலெக்டர். அதனாலேயே விக்கெட் எடுக்கும் போதெல்லாம் அதை திக்வேஷ் காசோலையில் விக்கெட்டாக எழுதி கொண்டாடுகிறார்” என்று ரிஷப் பண்ட் விளக்கினார்.

Advertisement