ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்து திண்டாடி வருகிறது. இந்த வருடம் அந்த அணியின் டாப் 5 பேட்ஸ்மேன்கள் யாருமே தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவிக்கவில்லை. குறிப்பாக பவர் பிளே ஓவர்களில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் காலை வாருகின்றனர். மிடில் ஆர்டரில் சிவம் துபே உள்ளிட்ட முக்கிய வீரர்களும் அதிரடி காட்டத் தவறுகின்றனர்.
அதனால் லோயர் ஆர்டரில் விளையாடும் தோனி மெதுவாக பேட்டிங் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். அதே சமயம் ஒரு கட்டத்திற்கு மேல் அதிரடியாக விளையாடத் தவறும் அவர் சென்னை அணியின் தோல்வியை உறுதி செய்கிறார். இருப்பினும் சென்னை அணியின் தோல்விக்கு தோனி முதன்மை காரணம் என்று எதிரணி ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
பாண்டிங் ஆதரவு:
மேலும் காலம் போன கடைசியில் தோனி ஓய்வு பெற வேண்டும் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இப்போதும் வேகமாக விக்கெட் கீப்பிங் செய்வதிலும் அதிரடியாக பேட்டிங் செய்வதிலும் தோனி மிகச் சிறந்தவர் என்று ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ஒருவேளை இந்த வருடம் முழுவதுமே இப்படி விளையாடினால் ஓய்வு பற்றி தோனி சிந்திப்பார் என்றும் பாண்டிங் தெரிவித்துள்ளார்.
மேலும் 5 கோப்பைகளை வென்ற வெற்றிகரமான சென்னை அணி எடுக்கும் முடிவுகளை கேள்வி கேட்பதில் அர்த்தமில்லை என்று தெரிவிக்கும் பாண்டிங் இது பற்றி பேசியது பின்வருமாறு. “எனக்குத் தெரிந்த தோனியின் விக்கெட் கீப்பிங் எந்தளவிலும் மோசமாகவில்லை. அன்று போலவே இன்றும் ஸ்பின்னர்களுக்கு எதிராக அவர் ஸ்டம்ப்புகளுக்கு அருகே நின்று எதையும் தவற விடுவதில்லை”
இப்போவும் நல்ல பிளேயர்:
“சிஎஸ்கே செய்யும் விஷயங்களைப் பற்றி நீங்கள் வாதிட முடியாது. ஏனெனில் அவர்கள் ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக இருக்கின்றனர். நீண்ட காலமாக சிறந்த பயிற்சியைக் கொண்டுள்ள அவர்கள் சரியான முடிவை எடுக்கக் கூடியவர்கள். தற்போது இம்பேக்ட் வீரர் விதிமுறை இருப்பதால் தோனி அதிரடியாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன்களுக்குப் பின் விளையாடுகிறார்”
இதையும் படிங்க: ஒரே போட்டியில் 2 விதிமுறைகளை மீறிய இஷாந்த் சர்மா.. 2 தண்டனைகளை அறிவித்த பிசிசிஐ.. காரணம் என்ன?
“கடந்த சில வருடங்களாகவே தோனி கடைசி 10 – 12 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் குறைந்த வேலையை செய்து வருகிறார். அந்த வகையில் இப்போதும் தோனி ஐபிஎல் தொடரில் ஆபத்தானவர். அவருடைய ஓய்வு இந்த ஐபிஎல் எப்படிச் செல்கிறது என்பதைப் பொறுத்து அமையலாம். ஒருவேளை சிறப்பாக விளையாடினால் அவர் தொடர்ந்து விளையாடுவார். இல்லையெனில் ஓய்வுப் பற்றி சிந்திக்கத் துவங்குவார். எப்படி இருந்தாலும் அவர் நீண்ட காலமாக சிறந்த வீரராக விளையாடி வருகிறார்” என்று கூறினார்.



