சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-வது லீக் போட்டியில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் விளையாடின. அதன்படி நடைபெற்ற ஐந்து போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அப்படி முதலில் விளையாடிய டெல்லி அணியானது :
கே.எல் ராகுலின் திட்டத்தை பாராட்டிய : ஹேமங் பதானி
சென்னை அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை குவித்தது. டெல்லி கேபிட்டல்ஸ் சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரரான கே.எல் ராகுல் 57 பந்துகளில் 77 ரன்களையும், ஸ்டப்ஸ் 12 பந்துகளில் 24 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது டெல்லி அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக டெல்லி அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக விஜய் சங்கர் 69 ரன்களையும், தோனி 30 ரன்களையும் குவித்து இருந்தனர். இந்நிலையில் இந்த போட்டியின் போது கே.எல் ராகுல் நூர் அகமதின் பந்துவீச்சை அடித்து விளையாடப்போகிறேன் என்று தன்னிடம் தெரிவித்துவிட்டு தான் சென்றார் என டெல்லி அணியின் பயிற்சியாளரான ஹேமந்த் பாதானி அவரை பாராட்டியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : சிஎஸ்கே அணியின் முக்கிய பௌலரே நூர் அகமது தான் எனவே அவரை பவுலிங் செட்டாக விடக்கூடாது என்று கே.எல் ராகுல் மிகவும் தெளிவாக இருந்தார். மேலும் அவரைப் போன்ற ஒரு நல்ல பந்துவீச்சாளரை போட்டியின் ஆரம்பத்திலேயே அடித்தால் நிச்சயம் அவர் அதிலிருந்து மீண்டு வருவது கடினம்.
இதையும் படிங்க : எத்தனையோ பேர் இருந்தாலும் அடுத்த இந்திய கேப்டனாக அவர்தான் சரியா இருப்பார் – கபில் தேவ் கருத்து
அதனை சரியாக புரிந்து கொண்ட கே.எல் ராகுல் அவருக்கு எதிராக மிகச்சிறப்பாக விளையாடியிருந்தார். இந்திய அணியில் பல இடங்களில் விளையாடியிருக்கும் அவர் எந்த இடத்தில் தனக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தாலும் அதனை மிக சிறப்பாக செய்கிறார் என ஹேமங் பதானி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.



