எத்தனையோ பேர் இருந்தாலும் அடுத்த இந்திய கேப்டனாக அவர்தான் சரியா இருப்பார் – கபில் தேவ் கருத்து

Kapil Dev
- Advertisement -

கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் நடைபெற்று முடிந்த 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இப்படி அடுத்தடுத்த ஐசிசி கோப்பைகளை ரோகித் சர்மா வெற்றி பெற்றிருந்தாலும் தற்போது அவர் 38 வயதை எட்டியுள்ளதால் இன்னும் எத்தனை ஆண்டு காலம் விளையாடுவார்? என்பது உறுதி கிடையாது.

அடுத்த கேப்டனாக இருக்க தகுதியான வீரர் அவர்தான் : கபில் தேவ்

எனவே இந்திய அணியானது அடுத்த தலைமுறை கேப்டனை தயார் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பலரது மத்தியிலுல் இருந்து வருகிறது. தற்போதைக்கு இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா வெகு விரைவில் கேப்டன் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டு பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடுவார் என்று ஏற்கனவே பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருக்கு அடுத்து ரோகித் சர்மாவின் நிலை என்ன? என்பது குறித்து பிசிசிஐ அறிவிக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக வருவதற்கு யார் தகுதியான நபர்? என்பது குறித்த கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ் தனது பதிலை அளித்துள்ளார். அதுகுறித்து அவர் கூறியதாவது :

என்னைப் பொறுத்தவரை ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் வெள்ளைப்பந்து கேப்டனாக இருக்க வேண்டும். இந்திய அணியில் திறமையான வீரர்கள் பலர் இருந்தாலும் பாண்டியா தான் என்னுடைய அடுத்த கேப்டன் தேர்வாக இருக்கிறார். ஏனெனில் பாண்டியா மிகவும் இளமையாக இருக்கிறார். அதோடு போட்டியில் மூன்று வகையான பிரிவிலும் அவரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவே அவர் கேப்டனாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் அணியை வெகு சிறப்பாக வழி நடத்துவார் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் இருக்கும் அவர் எதிர்காலத்தில் டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அவர் டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருந்து வருவதால் ஒவ்வொரு கிரிக்கெட் அணிக்கும் வெவ்வேறு கேப்டன்களை நியமிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டையும் விளையாட வேண்டும் என்று கபில் தேவ் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ராஜஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷேன் வார்னேவின் சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன் – விவரம் இதோ

தற்போதைய இந்திய அணியை பொறுத்தவரை டி20 கேப்டனாக சூரியகுமார் யாதவும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் ரோகித் சர்மாவும் இருக்கின்றனர். ஆனால் எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுவார் என்று கூறப்படுகிறது.

Advertisement