கடைசி 2 போட்டியில் செய்ஞ்ச தப்பை இந்த போட்டியில் பண்ணல.. வெற்றிக்கு பிறகு – அஜின்க்யா ரஹானே மகிழ்ச்சி

Rahane
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது லீக் போட்டியானது நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

சன் ரைசர்ஸ் அணிக்கெதிரான வெற்றிக்கு காரணம் இதுதான் : அஜின்க்யா ரஹானே

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது. கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக வெங்கடஷ் ஐயர் 60 ரன்களையும், அன்கிரிஷ் ரகுவன்சி 50 ரன்களையும் குவித்தனர். பின்னர் 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது :

- Advertisement -

கொல்கத்தா அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 80 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் கிடைத்த வெற்றி எங்களுக்கு மிக முக்கியமான ஒன்று.

அதிலும் இவ்வளவு பெரிய வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த போட்டியின் போது ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்ததால் முதல் 6 ஓவர்கள் வரை மேலும் எந்த விக்கெட்டையும் இழக்காமல் இன்டென்டுடன் விளையாட வேண்டும் என்று நினைத்தோம். அதேபோன்று விளையாடி கடைசி கட்டத்தில் விக்கெட்டுகள் கையில் இருந்ததால் எங்களால் பெரிய ரன் குவிப்பை நோக்கி செல்ல முடிந்தது.

- Advertisement -

வெங்கடேஷ் ஐயர் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி பெரிய ரன் குவிப்பிற்கு அழைத்துச் சென்றனர். கடைசி இரண்டு போட்டிகளாக நாங்கள் பேட்டிங்கில் செய்த சொதப்பலே தோல்விக்கு காரணமாக அமைந்தது. ஆனால் அந்த தப்பை இம்முறை செய்யாமல் மிகச் சிறப்பாக விளையாடியுள்ளதாக நினைக்கிறோம். இந்த போட்டியில் 170 முதல் 180 ரன்கள் வரை அடித்தாலே வெற்றிக்கு போதுமான ரன்களாக இருக்கும் என்று நினைத்தோம்.

இதையும் படிங்க : 80 ரன்ஸ்.. 5க்கு 5.. ஹைதராபாத்தை ஊதி தள்ளிய.. கொல்கத்தா அபார வெற்றியுடன் சென்னை, ஆர்சிபி சாதனை சமன்

ஆனால் அதை விட அதிகமாக ரன்கள் வந்ததில் மகிழ்ச்சி. இந்த போட்டியின் போது சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் மிகச் சிறப்பாக பந்துவீசி இருந்தனர். அதேபோன்று வைபவ் அரோரா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் போட்டியின் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி எங்களுக்கு போட்டியில் சாதகத்தை ஏற்படுத்தி கொடுத்தனர் என ரஹானே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement