80 ரன்ஸ்.. 5க்கு 5.. ஹைதராபாத்தை ஊதி தள்ளிய.. கொல்கத்தா அபார வெற்றியுடன் சென்னை, ஆர்சிபி சாதனை சமன்

- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் மூன்றாம் தேதி இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் 15வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தைப் பெற்ற ஹைதராபாத் அணி கொல்கத்தாவுக்கு எதிராக முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 200-6 ரன்கள் குவித்து அசத்தியது.

டீ காக் 1, சுனில் நரேன் 7 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்த அந்த அணிக்கு கேப்டன் ரகானே அதிரடியாக விளையாடி 38 (27) ரன்கள் அடித்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய அங்ரிஸ் ரகுவன்சி தன்னுடையப் பங்கிற்கு அதிரடியாக விளையாடி அரை சதத்தை அடித்து 50 (32) ரன்கள் அடித்து கை கொடுத்தார். அதை வீணடிக்காமல் மிடில் ஆர்டரில் மிரட்டலாக விளையாடிய துணைக் கேப்டன் வெங்கடேஷ் ஐயர் 7 பவுண்டரி 3 சிக்ஸருடன் 60 (29) ரன்கள் விளாசி அசத்தினார்.

- Advertisement -

கொல்கத்தா அசத்தல்:

கடைசி நேரத்தில் ரிங்கு சிங் தமது பங்கிற்கு 4 பவுண்டரி ஒரு சிக்சரை அடித்து 32* (17) ரன்கள் அடித்து நல்ல ஃபினிஷிங் செய்தார். ஹைதராபாத் அணிக்கு ஷமி, கேப்டன் கமின்ஸ், ஜீசன் அன்சாரி, ஹர்சல் பட்டேல், கமிண்டு மெண்டிஸ் தலா 1 விக்கெட் எடுத்தனர். அடுத்ததாக விளையாடிய ஹைதராபாத் அணிக்கு முதல் ஓவரிலேயே டிராவிஸ் ஹெட்டை 2 ரன்னில் வைபவ் அராரோ அவுட்டாக்கினார்.

அடுத்த ஓவரில் அபிஷேக் சர்மா 2 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் அதற்கடுத்ததாக வந்த இசான் கிசான் 2 ரன்னில் விக்கட்டை இழந்து பெரிய பின்னடைவைக் கொடுத்தார். அதனால் 9-3 என தடுமாறிய ஹைதராபாத் அணியை மீட்டெடுக்க முயற்சித்த நித்திஷ் ரெட்டி 19 (15) ரன்னில் அவுட்டானார். மறுபுறம் இலங்கை வீரர் கமிண்டு மெண்டிஸ் 27 (20) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

- Advertisement -

கொல்கத்தா வெற்றி:

மிடில் ஆடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட க்ளாசன் 33 (21) ரன்களில் அவுட்டாகி போராடத் தவறினார். இறுதியில் கேப்டன் கமின்ஸ் 14 ரன்கள் எடுத்தும் 16.4 ஓவரிலேயே ஹைதராபாத்தை 120 ரன்களுக்கு சுருட்டிய கொல்கத்தா 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய அந்த அணிக்கு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

இதையும் படிங்க: இந்த வருஷம் என்னோட அட்டகாசமான பேட்டிங்க்கு காரணம் இதுதான் – சாய் சுதர்சன் வெளிப்படை

அவருடன் வைபோ அரோரா 3, ரசல் 2 விக்கெட்டுகள் எடுத்து வெற்றியில் பங்காற்றினர். இதையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் அதிக முறை 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற சென்னை மற்றும் பெங்களூரு அணிகளின் (தலா 7 முறை) சாதனையை கொல்கத்தா சமன் செய்துள்ளது. அத்துடன் 2024 ஐபிஎல் ஃபைனல் உட்பட கடந்த 5 போட்டிகளில் ஹைதராபாத்துக்கு எதிராக கொல்கத்தா 5 வெற்றிகளைப் பெற்றுள்ளது. மறுபுறம் அதிரடியாக மட்டுமே விளையாடுவோம் என்ற அடம் பிடிக்கும் ஹைதராபாத் பரிதாபமாக தோற்றது.

Advertisement