இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் இந்த ஆண்டு துவக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் போது கைவிரலில் காயமடைந்தார். அதன் காரணமாக இங்கிலாந்து தொடர் முடிந்த கையோடு தனது காயத்திற்கான அறுவை சிகிச்சையும் அவர் மேற்கொண்டு இருந்தார். அதனை தொடர்ந்து ஓய்வில் இருந்து வந்த அவர் ஐபிஎல் தொடருக்காக பயிற்சியையும் மேற்கொண்டார்.
சஞ்சு சாம்சனுக்கு பச்சைக்கொடி காட்டிய கிரிக்கெட் அகாடமி :
அந்த வகையில் இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் தொடரின் ஆரம்பத்திலேயே அவர் ராஜஸ்தான் அணியுடன் இணைந்து இருந்தாலும் தனக்கு ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடையாததால் முதல் மூன்று போட்டிகளில் தான் இன்பேக்ட் பிளேயராக மட்டுமே விளையாடுவேன் என்று அறிவித்திருந்தார்.
மேலும் தனக்கு பதிலாக ரியான் பராக் முதல் மூன்று போட்டிகளுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்துவார் என்றும் அறிவித்திருந்தார். அந்த வகையில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது தங்களது முதல் மூன்று லீக் ஆட்டங்களில் விளையாடி முடித்துள்ள வேளையில் இந்த மூன்று ஆட்டத்தில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்த அந்த அணி மூன்றாவது போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் இரண்டு புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தினை பிடித்துள்ளது. ரியான் பராக் தலைமையில் மோசமான ஆரம்பத்தை பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் மீண்டும் கம்பேக் கொடுக்கும் விதமாக தற்போது சஞ்சு சாம்சன் மீண்டும் கேப்டனாக திரும்ப உள்ளார் என்ற மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
அந்த வகையில் கடைசியாக நடைபெற்று முடிந்த சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு பெங்களூரு சென்ற சாம்சன் தனது உடற்தகுதியை பரிசோதித்த வேளையில் அவர் மீண்டும் ஐபிஎல் தொடரில் முழுவதுமாக கேப்டனாக விளையாடும் அளவிற்கு தகுதியாக உள்ளதாக தேசிய கிரிக்கெட் அகாடமி தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தற்போது மீண்டும் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக திரும்ப இருக்கிறார்.
இதையும் படிங்க : அப்போ கே.எல் ராகுல்.. இப்போ நீங்களா? சஞ்சீவ் கோயங்காவிடம் வசமாக சிக்கிய ரிஷப் பண்ட் – விவரம் இதோ
ஏப்ரல் 5-ஆம் தேதி நடைபெற இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலிருந்து அவர் அந்த அணியை வழிநடத்துவார் என்றும் தெரிகிறது. இருப்பினும் விக்கெட் கீப்பராக துருவ் ஜுரேல் தொடர்வாரா? அல்லது சஞ்சு சாம்சன் விளையாடுவாரா? என்பது போட்டியின் போது தான் தெரியவரும்.



