ஷ்ரேயாஸ் ஐயர் சொன்ன இந்த வார்த்தை தான் நான் அசத்தலாக விளையாட காரணம் – நேஹல் வதேரா பேட்டி

Nehal Wadhera
- Advertisement -

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13-வது லீக் ஆட்டத்தில் விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்தது.

நான் சிறப்பாக விளையாட ஷ்ரேயாஸ் ஐயர் தான் காரணம் : நேஹல் வதேரா

லக்னோ அணி சார்பாக அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 44 ரன்களையும், ஆயுஷ் பதோனி 41 ரன்களையும் குவித்தனர். பின்னர் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது 16.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 177 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியின் போது பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 69 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 52 ரன்களையும், நேஹல் வதேரா 43 ரன்களையும் அடித்தனர். அதிலும் குறிப்பாக இந்த போட்டியில் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய நேஹல் வதேரா நான்காவது இடத்தில் விளையாடி 25 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 43 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

இந்நிலையில் தனது இந்த சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய நேஹல் வதேரா கூறுகையில் : எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியின் போது மிகச் சிறப்பாக பந்து வீசினர். அதேபோன்று பேட்டிங்கில் நானும் ஸ்ரேயாஸ் ஐயரும் இணைந்து மிகச் சிறப்பாக விளையாடியதாக உணர்கிறோம். பிரப்சிம்ரன் சிங் கொடுத்த ஓப்பனிங் மிகச் சிறப்பாக இருந்ததால் எங்களால் எளிதில் விளையாட முடிந்தது.

- Advertisement -

இந்த போட்டியின் போது நான் இன்று விளையாடுவேன் என்று கடைசி நேரத்தில் தான் எனக்கு தெரிய வந்தது. எனவே நான் உள்ளே சென்றதும் என்னுடைய வாய்ப்பை எடுத்துக்கொண்டு எனக்கு வரும் இயல்பான ஷாட்களை விளையாட வேண்டும் என்று நினைத்தேன். அதே வேளையில் எங்களது அணியின் கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர் என்னிடம் வந்து “உன்னுடைய இயல்பான ஆட்டத்தை நீ விளையாடு”, “உன்னுடைய ஷாட்டுகளை நீ வெளிப்படுத்தினால் நிச்சயம் அது சிறப்பாக இருக்கும்” எனவே சுதந்திரத்துடன் பேட்டிங் செய் என்று எனக்கு ஊக்கமளித்தார்.

இதையும் படிங்க : ஆஸியில் சொதப்பிய ரோஹித்.. இந்த ஒரு கண்டிஷனுக்கு ஓகேன்னா இங்கிலாந்தில் விளையாடலாம்.. மைக்கேல் கிளார்க்

அவர் கூறிய அந்த வார்த்தைகள் தான் என்னை சிறப்பாக செயல்பட வைத்தது. ஏற்கனவே கடந்து சில ஆண்டுகளாக நான் ஐபிஎல் தொடரில் விளையாடுவதால் அந்த அனுபவமும் இந்த போட்டியில் எனக்கு கை கொடுத்தது என நேஹல் வதேரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement