ஆஸியில் சொதப்பிய ரோஹித்.. இந்த ஒரு கண்டிஷனுக்கு ஓகேன்னா இங்கிலாந்தில் விளையாடலாம்.. மைக்கேல் கிளார்க்

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் மோசமான தோல்விகளை சந்தித்தது. அந்த தோல்விகளால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. அந்த தோல்விக்கு கேப்டன் ரோஹித் சர்மா முக்கிய காரணமாக அமைந்தார் என்று சொல்லலாம். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் மிகவும் தடுமாற்றமாக பேட்டிங் செய்த அவர் ஒரு அரை சதத்தை கூட அடிக்கவில்லை.

அதன் காரணமாக கடைசிப் போட்டியில் தன்னைத்தானே அணியிலிருந்து ரோகித் சர்மா நீக்கிக்கொண்டார். அதனால் ஒரு தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தன்னைத்தானே அணியிலிருந்து நீக்கிக்கொண்ட முதல் இந்திய கேப்டன் என்ற மோசமான சாதனையையும் ரோஹித் படைத்தார். அதன் காரணமாக ஜூன் மாதம் இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இங்கிலாந்தில் ரோஹித்:

ஏனெனில் ஆஸ்திரேலியாவை விட இங்கிலாந்தில் வேகம், பவுன்ஸ் ஆகியவற்றைத் தாண்டி சீதோசன நிலை காரணமாக கணிக்க முடியாத ஸ்விங் இருக்கும். அங்கே தற்சமயத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான ஃபார்மில் இருக்கும் ரோஹித் அசத்துவாரா? என்பது சந்தேகமாகும். அதனால் ஜஸ்ப்ரித் பும்ரா குணமடைந்து விட்டால் ரோஹித்தை கழற்றி விட்டு அவரை இங்கிலாந்து தொடரில் கேப்டனாக தேர்ந்தெடுக்க பிசிசிஐ தயாராகி வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் தொடரில் ரோகித் சர்மா மிடில் ஆர்டரில் விளையாட வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். ஏனெனில் துவக்க வீரராக புதிய பந்தில் தடுமாறும் ரோகித் மிடில் ஆர்டரில் விளையாடுவது கொஞ்சம் எளிதாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். இந்த நிபந்தனைக்கு உட்பட்டால் ரோகித் கேப்டனாகவே விளையாடலாம் என்று கூறும் கிளார்க் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ஒரு கண்டிஷன்:

“ரோஹித் சர்மா இன்னும் இந்தப் போட்டியில் இருக்கிறார். அவரது கிளாஸ் என்பது நிரந்தரமானது. நீங்கள் அதை 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பார்த்திருப்பீர்கள். அவர் ஐந்தாவது இடத்தில் விளையாடுவதற்கு சரியானவர். அவர் ஐந்தாவது இடத்தில் விளையாடுவதற்கு சரியானவராக இருப்பார். அந்த வாய்ப்பில் அவர் 2வது புதியப் பந்தை எதிர்கொள்ள முடியும்”

இதையும் படிங்க: 6,6,4,4.. 99 ரன்ஸ்.. 24 வயது வீரர் தனித்துவ சாதனை.. இளம் நியூஸிலாந்து அணியிடம் ஃசெல்ப் எடுக்காமல் தோற்ற பாகிஸ்தான்

“ஒருவேளை ஆரம்பத்திலேயே விக்கெட் இழந்தாலும் அவர் நங்கூரமாக விளையாட முடியும். ஆனால் ரோகித் துவக்க வீரராக விளையாடவே விரும்புவார். இருப்பினும் நான் இந்திய அணியின் தேர்வாளராக இருந்தால் ரோகித் சர்மாவை இங்கிலாந்து தொடரில் மிடில் ஆர்டரில் கேப்டனாக விளையாட தேர்ந்தெடுப்பேன்” என்று கூறினார்.

Advertisement