தோனி சொன்னதை செய்த டிராவிட்.. நலம் விசாரித்த தோனி.. இளம் வீரர்களை வைத்து செய்த மரியாதையான செயல்

MS Dhoni Rahul Dravid
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 11வது லீக் போட்டியில் சென்னை அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோற்கடித்தது. கவுகாத்தியில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் 183 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய சென்னை சுமாராக பேட்டிங் செய்து 20 ஓவரில் 176-6 ரன்கள் மட்டுமே எடுத்து தங்களது 2வது தோல்வியை சந்தித்தது.

முன்னதாக 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு ஜாம்பவான் ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு முக்கிய பங்காற்றினார். அந்த வெற்றியுடன் இந்திய அணியிலிருந்து விடைபெற்ற அவர் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார். 2013 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பை தொடரின் ஃபைனலுக்கு ராஜஸ்தானை கேப்டனாக அழைத்துச் சென்ற அவர் தற்போது பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

வீல்சேரில் டிராவிட்:

இருப்பினும் ஐபிஎல் துவங்குவதற்கு முன்பாக உள்ளூரில் விளையாடிய போது துரதிஷ்டவசமாக ராகுல் டிராவிட் காயத்தை சந்தித்தார். அதன் காரணமாக முழுமையாக நடக்க முடியாத அவர் ஊன்றுகோல் மற்றும் வீல்சேர் பயன்படுத்தி மைதானத்திற்கு வந்து ராஜஸ்தான் அணிக்கு பயிற்சிக் கொடுத்து வருகிறார். அது ஏற்கனவே ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஏனெனில் டிராவிட் போன்ற ஜாம்பவான் அந்தஸ்து கொண்டவர் நினைத்தால் காயத்தை காரணமாகச் சொல்லி குணமடையும் வரை விடுப்பு எடுக்க முடியும். ஆனால் அதை செய்யாத ராகுல் டிராவிட் தமக்கு கொடுக்கப்பட்ட பணியில் காயத்தையும் தாண்டி அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார். அத்துடன் “என்னுடைய சென்னை அணிகாக தேவைப்பட்டால் வீல்சேரில் வந்து கூட விளையாடுவேன்” என்று சமீபத்தில் தோனி சொன்னது வைரலானது.

- Advertisement -

ஜாம்பவானுக்கு சென்றார்கள்:

அதை ராகுல் டிராவிட் தற்போது சொல்லாமலேயே நிரூபித்துள்ளார் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட அவரை இந்தப் போட்டியின் முடிவில் எம்எஸ் தோனி நேராக சந்தித்து காயம் பற்றிய விவரங்களை அன்போடு கேட்டு நலம் விசாரித்தார். அப்படியே இருவரும் பேசிக் கொண்டிருந்த போது சென்னை அணியின் இளம் வீரர்கள் ராஜஸ்தான் வீரர்களுக்கு கை கொடுத்து விட்டு அந்தப் பக்கமாக சென்றனர்.

இதையும் படிங்க: தோனி, ஜடேஜா தடவாம இதை செய்யனும்.. வெற்றிக்கு அவரை கழற்றி விட்டு கான்வே வரனும்.. புஜாரா அட்வைஸ்

அப்போது அந்த இளம் வீரர்கள் அனைவரையும் வந்து ராகுல் டிராவிட் அவர்களிடம் கைகொடுத்து மரியாதை செலுத்துமாறு தோனி கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து ஆண்ட்ரே சித்தார்த், நாகர்கோட்டி, குர்ஜப்நீத் சிங் உள்ளிட்ட 6 – 7 சென்னை வீரர்கள் டிராவிட்டுக்கு கை கொடுத்தனர். அந்த வகையில் தோனி தம்முடைய முன்னாள் இந்திய கேப்டன் டிராவிட்டுக்கு நலம் விசாரித்தது மரியாதை கொடுத்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement