தோனி பற்றி அந்த குறை சொல்ல முடியாம அடம் பிடிக்கும் ருதுராஜ்.. சொல்வதை ஜீரணிக்க முடியல.. மனோஜ் திவாரி

Manoj Tiwary
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது முதல் போட்டியில் மும்பையை தோற்கடித்தது. ஆனால் இரண்டாவது போட்டியில் பெங்களூரு அணியிடம் தோற்ற சென்னை 3வது போட்டியில் ராஜஸ்தானிடம் வீழ்ந்தது. கௌகாத்தியில் நடைபெற்ற அந்தப் போட்டியில் ராஜஸ்தான் நிர்ணயித்த 183 ரன்களை துரத்திய சென்னை 20 ஓவரில் 176-6 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

சென்னைக்கு கேப்டன் ருதுராஜ் 63 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆனால் ரச்சின் ரவீந்திரா 0, ராகுல் திரிபாதி 23, சிவம் துபே 18, விஜய் சங்கர் 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். கடைசியில் ஜடேஜா 32*, தோனி 16, ஓவர்டன் 11* ரன்கள் எடுத்தும் ஃபினிஷிங் செய்யத் தவறியதால் சென்னை தங்களது இரண்டாவது தோல்வியை பதிவு செய்தது.

- Advertisement -

இதெல்லாம் ஜீரணிக்க முடியல:

முன்னதாக பெங்களூருக்கு எதிரான போட்டியில் சென்னை 50 ரன்கள் வித்தியாசத்தில் பெரியத் தோல்வியை சந்தித்தது. ஆனால் பெரியளவில் அல்லாமல் வெறும் 50 ரன்கள் வித்தியாசத்தில் மட்டும் தோற்றதில் மகிழ்ச்சி என்று சென்னை கேப்டன் ருதுராஜ் தெரிவித்தார். இந்நிலையில் சென்னை அணி தொடர்ந்து செய்யும் தவறுகளை ஒப்புக்கொள்ளாமல் ருதுராஜ் அடம் பிடிப்பதாக முன்னாள் வீரர் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார்.

மேலும் தோனி மேலே வந்து பேட்டிங் செய்வதை விரும்பினாலும் அதை வெளியே சொல்ல முடியாமல் ருதுராஜ் தவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஏனெனில் தோனியை பற்றி குறை சொன்னால் சிஎஸ்கே ரசிகர்களே விமர்சிப்பார்கள் என்று மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “போட்டி முடிந்த பின் ருதுராஜ் கொடுக்கும் இது போன்ற அறிக்கைகளை என்னால் ஜீரணிக்க முடியவில்லை”

- Advertisement -

குறை சொல்ல முடியல:

“இதைப் பார்க்கும் போது தாங்கள் செய்யும் தவறை ஒப்புக்கொள்ளாமல் ருதுராஜ் அடம் பிடிப்பது போல் தெரிகிறது. பெங்களூரு அணிக்கு எதிரான கடந்தப் போட்டியில் தோனி ஒன்பதாவது இடத்தில் களமிறங்கினார். அப்போது வெறும் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதில் மகிழ்ச்சி என்று ருதுராஜ் தெரிவித்தார். இது பெரியத் தோல்விக்கு பின் சொல்லப்பட வேண்டிய கருத்து அல்ல”

இதையும் படிங்க: வெற்றி போனாலும் பரவால்ல.. உதவாக்கரை கிடையாது.. தோனி முன்னதாக பேட்டிங் செய்யாதது ஏன்? பிளெமிங் பேட்டி

“தோனி மேலே பேட்டிங் செய்ய வேண்டும் என்று மொத்த உலகமும் சொல்கிறது. ஆனால் அதை சொல்ல முடியாமல் கேப்டன் ருதுராஜ் அழுத்தத்தின் கீழ் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் மனதில் இருப்பதைப் பேச விரும்பினாலும் வெளியில் சொல்ல முடியவில்லை. ஒருவேளை கேப்டனாக இருப்பதால் அவர் தனது அணியை பாதுகாக்க வேண்டிய சூழ்நிலையால் இப்படி பேசலாம்” என்று கூறினார்.

Advertisement