தார் ரோட்டில் 280 ரன்ஸ் அடிச்சாலும் கோப்பை ஜெய்க்க அவங்க மனசு வைக்கனும்.. ஹைதராபாத்தை சாடிய வாகன்

Micheal Vaughan
- Advertisement -

ஐபிஎல் 2025 பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் ஏழாவது போட்டியில் ஹைதராபாத் அணியை லக்னோ 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஹைதராபாத் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 47, அன்கிட் வர்மா 36 ரன்கள் எடுத்த உதவியுடன் 191 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்தது. லக்னோவுக்கு அதிகபட்சமாக சர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்ததாக விளையாடிய லக்னோ 16.2 ஓவரில் 193/5 ரன்கள் எடுத்து தங்களுடைய முதல் வெற்றியைப் பெற்றது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 70, மிட்சேல் மார்ஷ் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஹைதராபாத்துக்கு கேப்டன் பட் கமின்ஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. இந்நிலையில் இப்போட்டியில் 191 என்ற இலக்கு கட்டுப்படுத்த முடியாதது அல்ல என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

தார் ரோட் பிட்ச்:

ஆனால் அதற்குத் தகுந்தார் போல் சிறப்பாக பவுலிங் செய்து இலக்கை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஹைதராபாத் நிர்வாகம் ஹைதராபாத் பிட்ச்சை தார் ரோட் போல உருவாக்கியுள்ளதாக அவர் சாடியுள்ளார். அஇப்படிப்பட்ட பிட்ச்சில் விளையாடினால் பவுலர்களின் தன்னம்பிக்கை குறைந்து விடும் என்றும் வாகன் கூறியுள்ளார். அதனால் ஹைதராபாத் அணியால் கோப்பையை வெல்ல முடியாது என்று எச்சரிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“பெரிய ஸ்கோர் குவிக்கக்கூடிய ஹைதராபாத் அணியின் பேட்டிங் பவர் பற்றி நாம் பேசுகிறோம். அதே சமயம் அவர்கள் தங்களது பவுலர்கள் தன்னம்பிக்கையை இழக்காமல் இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் அவர்களது பவுலர்கள் இந்த ரோட்டில் பவுலிங் செய்கிறார்கள். இன்று கமின்ஸ் நன்றாக பவுலிங் செய்தாலும் முதல் போட்டியில் 60 ரன்கள் வழங்கினார்”

- Advertisement -

கோப்பை வெல்ல முடியாது:

“ஜாம்பா இன்று அடித்து நொறுக்கப்பட்டார். ஷமி 12 எக்கனாமியில் பவுலிங் செய்தார். எனவே சொந்த ஊரில் உள்ள மைதானத்தில் ரோட் போன்ற பிட்ச்சில் உங்களது பவுலிங் அட்டாக் விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் திடீரென ஒரு நாள் அவர்களிடம் இங்கு அசத்துவதற்கான முழுமையான தன்னம்பிக்கை இல்லாமல் போகலாம்”

இதையும் படிங்க: ஹைதெராபாத் என்ன கொம்பா? 300 ரன்ஸ் அடிச்சாலும் நாங்க இதை செய்வோம்.. விட்ட சவாலில் வென்ற ரிஷப் பண்ட்

“உண்மையில் ஹைதராபாத் ஒரே ஸ்டைலில் விளையாடுவது எனக்குக் கவலையாக இருக்கிறது. அனைத்து நேரங்களிலும் உங்களால் அடித்து நொறுக்கும் ஆட்டத்தை விளையாட முடியாது. இன்று அந்த அணுகுமுறையை பின்பற்றியே அவர்கள் வீழ்ந்தனர். இப்படி விளையாடுவதற்கு பதிலாக கொஞ்சம் சாதுரியமாக செயல்பட்டு 220 – 230 ரன்கள் அடித்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் அல்லவா? இந்த உலகில் நடைபெறும் அனைத்துத் தொடர்களிலும் எந்த அணியும் ஒரே ஸ்டைலில் கிரிக்கெட்டை விளையாடி கோப்பையில் வென்றதை நான் பார்த்ததில்லை” என்று கூறினார்.

Advertisement