ஹைதெராபாத் என்ன கொம்பா? 300 ரன்ஸ் அடிச்சாலும் நாங்க இதை செய்வோம்.. விட்ட சவாலில் வென்ற ரிஷப் பண்ட்

Rishabh Pant
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 27ஆம் தேதி நடைபெற்ற 7வது லீக் போட்டியில் ஹைதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஹைதராபாத் 20 ஓவரில் 191 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 47, அன்கிட் வர்மா 36 ரன்கள் எடுத்த நிலையில் லக்னோவுக்கு அதிகபட்சமாக தாகூர் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்ததாக விளையாடிய லக்னோ 16.1 ஓவரிலேயே 193-5 ரன்கள் எடுத்து தங்களுடைய முதல் வெற்றியைப் பெற்றது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 70 (26), மிட்சேல் மார்ஷ் 52 (31) ரன்கள் எடுத்து அசத்தினார்கள். ஹைதராபாத் அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 2 விக்கெட்டுகளை எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

- Advertisement -

ஹைதராபாத்னா கொம்பா:

முன்னதாக பட் கமின்ஸ் வந்தது முதலே ஹைதராபாத் அணி எதிரணிகளை அடித்து நொறுக்கி வருகிறது. கடந்த 2 வருடங்களில் 2 முறை 280 ரன்கள் அடித்த அந்த அணி டாப் 5இல் 4 ஸ்கோர்களை அடித்து சாதனையும் படைத்துள்ளது. குறிப்பாக இந்த வருடம் தங்களது சொந்த மைதானத்தில் ராஜஸ்தானை புரட்டி எடுத்த ஹைதராபாத் 286 ரன்கள் அடித்து 2வது அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைத்தது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த போட்டியில் லக்னோவை நொறுக்கி ஹைதெராபாத் 300 ரன்கள் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சொல்லப்போனால் நிறைய ரசிகர்கள் ஹைதராபாத் 300 ரன்கள் அடிப்பதை தவிர்க்க இப்போட்டியில் லக்னோ டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் பேசினார். ஆனால் இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் ஹைதெராபாத் எவ்வளவு அடித்தாலும் அதை சேசிங் செய்ய தயாராக இருப்பதாக சவால் விட்டார்.

- Advertisement -

சவாலில் வென்ற பண்ட்:

இது பற்றி அவர் டாஸ் வீசியதும் பேசியது பின்வருமாறு. “இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணியை நாங்கள் விரைவாக அவுட் செய்து பின்னர் இலக்கை சேசிங் செய்யப் பார்ப்போம். இவை அனைத்தும் அணியின் சேர்க்கையைப் பொறுத்தது. அதனாலேயே நாங்கள் சேசிங் செய்வதாக அறிவித்துள்ளோம்” என்று கூறினார். அப்போது தொகுப்பாளர் என்ன இலக்கை சேசிங் செய்ய விரும்புகிறீர்கள்? என்று கேட்டார்.

இதையும் படிங்க: தானாகவே முன்வந்து முக்கிய முடிவை எடுத்துள்ள ரோஹித் சர்மா.. இந்திய டெஸ்ட் அணியின் புதிய – கேப்டன் யார்?

அதற்கு “ஹைதராபாத் என்ன ஸ்கோர் அடித்தாலும் எங்களுக்கு பொருட்டல்ல. நாங்கள் அதை சேசிங் செய்வோம்” என்று பண்ட் சொன்னார். மொத்தத்தில் ஹைதராபாத் என்றால் கொம்பா? என்ற வகையில் பண்ட் ஆரம்பத்திலேயே பயமின்றி சவால் விட்டார். அதே போல ஹைதராபாத்தை 200 ரன்கள் கூட தொடவிடாமல் செய்த லக்னோ தங்களது முதல் வெற்றியைப் பெற்று ரிஷப் பண்ட் சொன்னதை செய்து காட்டியுள்ளது.

Advertisement