ஆஸிக்கு பெரிய விக்கெட்டான விராட் கோலி கூட இதை செஞ்சா போதும்.. மேட்ச் ரெடியாகிடலாம்.. ஹேசல்வுட் பேட்டி

Josh Hazelwood
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களது முதல் போட்டியில் கொல்கத்தாவை தோற்கடித்தது. அந்த வெற்றிக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 59* ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றினார். 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான செமி ஃபைனலில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த அவர் ஆட்டநாயகன் விருது வென்று இந்தியா கோப்பையை வெல்ல உதவினார்.

அதே ஃபார்மில் தற்போது ஐபிஎல் தொடரிலும் விளையாடும் அவர் ரஜத் படிதார் தலைமையில் பெங்களூரு அணிக்கு முதல் கோப்பையை வென்று கொடுக்கும் முனைப்புடன் ஆட்டத்தை துவங்கியுள்ளார். அவருடன் நிறைய வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்களும் சேர்ந்து விளையாடி வருகிறார்கள். இந்நிலையில் விராட் கோலிக்கு வலைப்பயிற்சியில் பவுலிங் செய்வதே பெரிய சவாலாக இருக்கும் என்று ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திர பவுலர் ஜோஸ் ஹேசல்வுட் கூறியுள்ளார்.

- Advertisement -

பெரிய விக்கெட்:

சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேனாக செயல்படும் விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எப்போதும் பெரிய விக்கெட் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட அவருக்கு எதிராக வலைப்பயிற்சியை முடிக்கும் போது போட்டிக்குத் தயாராக இருக்கிறோம் என்ற உணர்வு கிடைக்கும் என்றும் ஹேசல்வுட் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“சில நேரங்களில் பயிற்சியின் போது நீங்கள் சோர்வாக இருப்பீர்கள். அது போன்ற சமயத்தில் 22 யார்டில் விராட் கோலி இருப்பதைப் பார்த்தால் அதுவே உங்களை கியரை மாற்றி புத்துணர்ச்சியுடன் பயிற்சி எடுக்க வைக்கும். பயிற்சி போட்டியாக மாறும். அது போன்ற ஒளியை (ஆவ்ரா) விராட் கோலி தன்னிடம் கொண்டுள்ளார். இந்த விளையாட்டில் இதுவரை விராட் கோலி செய்ததையும் தற்போது செய்வதையும் நான் முழுமையாக மதிக்கிறேன்”

- Advertisement -

ஹேசல்வுட் பாராட்டு:

“அவர் உங்களுக்கு எதிராக வந்து ஷாட்டுகளை அடிக்கக்கூடிய ஒருவர். அது எப்போதும் நல்லது. ஏனெனில் அது ஸ்கோர் போர்டு நகர்வதற்கு உதவும். எந்த வகையான கிரிக்கெட்டிலும் விராட் கோலி எங்களுக்கு மிகப்பெரிய விக்கெட். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் நிறைய சதங்கள் அடித்துள்ளார். எனவே வலைப்பயிற்சியில் கூட அவர் உங்களைத் தள்ளுவார்”

இதையும் படிங்க: நான் கோச்’சானா ரோஹித்தை 20 கி.மீ ஓடவிடுவேன்.. ரசிகர்கள் மாதிரி இதை செய்ய மாட்டேன்.. யோக்ராஜ் பேட்டி

“அவருடன் பயிற்சியை முடிக்கும் போது போட்டிக்குத் தயாராக இருக்கிறோம் என்று நீங்கள் உணர்வீர்கள்” எனக் கூறினார். முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி 17 சதம் உட்பட 5477 சர்வதேச ரன்களை எடுத்துள்ளார். அவரை ஹேசல்வுட் 11 முறை அவுட் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து பெங்களூரு அணி அடுத்தப் போட்டியில் சென்னையை சேப்பாக்கத்தில் எதிர்கொள்கிறது.

Advertisement