நான் கோச்’சானா ரோஹித்தை 20 கி.மீ ஓடவிடுவேன்.. ரசிகர்கள் மாதிரி இதை செய்ய மாட்டேன்.. யோக்ராஜ் பேட்டி

Yograj Singh
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரோஹித் சர்மா, விராட் கோலி கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் சுமாராக விளையாடினர். அவர்களுடைய சுமாரான ஆட்டத்தால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஸ் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. குறிப்பாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் தம்முடைய விக்கெட்டை இழந்தார்.

அதன் காரணமாக ஏமாற்றமடைந்த ஒரு தரப்பு இந்திய ரசிகர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை நீக்கி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் நேரம் வந்து விட்டதாக விமர்சித்தனர். இந்நிலையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக வந்தால் ரசிகர்கள் போல ரோஹித்தை அணியிலிருந்து நீக்க மாட்டேன் என்று முன்னாள் வீரர் மற்றும் யுவ்ராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

20 கி.மீ ஓடவிடுவேன்:

மாறாக வைரத்தைப் போன்ற திறமைக் கொண்ட அவர்களை மேலும் பட்டையை தீட்டுவேன் என்று அவர் கூறியுள்ளார். எடுத்துக்காட்டாக முழுமையான ஃபிட்னஸ் இல்லாத ரோகித் சர்மாவை 20 கிலோ மீட்டர் ஓட விடுவேன் என்றும் யோக்ராஜ் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை நீங்கள் என்னை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமித்தால் நான் இந்த வீரர்களை எவ்வளவு வயதானாலும் தோற்கடிக்க முடியாதவர்களாக மாற்றுவேன்”

“அவர்களுடைய திறமையை யார் கொண்டு வருவார்? ரசிகர்கள் எப்போதும் அவர்களை அணியிலிருந்து நீக்குமாறு சொல்கிறார்கள், ரோகித்தை நீக்குங்கள் விராட் கோலியை தூக்குங்கள் என்று பேசுகின்றனர். ஆனால் ஏன் அவர்களை நீக்க வேண்டும்? கடினமான காலங்களில் இருக்கும் அவர்களிடம் குழந்தைகளே நான் உங்களுடன் இருக்கிறேன் என்று சொல்வேன்”

- Advertisement -

தந்தை மாதிரி:

“மேலும் ரஞ்சிக்கோப்பையில் விளையாடுங்கள் என்று அவர்களிடம் சொல்வேன். அல்லது ரோஹித் சர்மாவை நான் 20 கிலோமீட்டர் ஓட வைப்பேன். யாரும் அதைச் செய்ய மாட்டார்கள் இந்த வீரர்கள் வைரத்தைப் போன்றவர்கள். நான் அவர்களுடைய தந்தையைப் போல் இருப்பேன்”

இதையும் படிங்க: ஐ.பி.எல் கரியரில் நான் சந்தித்த மிகவும் கடினமான பவுலர் இவர்மட்டும் தான் – அம்பத்தி ராயுடு பதில்

“தோனி உட்பட யுவ்ராஜ் சிங்கையும் மற்ற வீரர்களையும் நான் வித்தியாசமாக பார்த்ததில்லை. அதே சமயம் தவறு என்றால் அது தவறு என்று சொல்வேன்” எனக் கூறினார். இந்த சூழ்நிலையில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியா வெல்ல விராட், ரோஹித் ஆகியோர் முக்கிய பங்காற்றினர். அதன் காரணமாக அவர்கள் அடுத்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவார்கள் என்று நம்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement