கொல்கத்தாவுக்காக டீ காக் 11 வருட சாதனை.. சதத்தை வேண்டுமென்றே நிறுத்திய ஜோப்ரா ஆர்ச்சரை ரசிகர்கள் விளாசல்

Quinton De Kock
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 26ஆம் தேதியின் நடைபெற்ற 7வது போட்டியில் கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை தோற்கடித்தது. கௌகாத்தியில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 151-9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 29, கேப்டன் ரியான் பராக் 25, துருவ் ஜுரேல் 33 ரன்கள் எடுத்தனர்.

கொல்கத்தா அணிக்கு அதிகபட்சமாக மொயின் அலி வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ரானா, வைபவ் அரோரா தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அடுத்ததாக விளையாடிய கொல்கத்தாவுக்கு சவாலான பிட்ச்சில் மொய்ன் அலி 5 (12) ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் ரஹானே 18 (15) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் மறுபுறம் நட்சத்திர வீரர் குயின்டன் டீ காக் நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாடி அரை சதத்தை அடித்தார்.

- Advertisement -

டீ காக் அசத்தல்:

அவருடன் சேர்ந்து விளையாடிய இளம் வீரர் ரகுவன்சி 22* (17) ரன்கள் அடித்து கை கொடுத்தார். அதைப் பயன்படுத்திய டீ காக் எதிர்ப்புறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடி கொல்கத்தாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்து சதத்தை நெருங்கினார். குறிப்பாக 17வது ஓவரில் கொல்கத்தா வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது.

டீ காக் சதத்தை தொடுவதற்கு 19 ரன்கள் தேவைப்பட்டதால் அவர் 100 ரன்கள் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதே போலவே ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய முதல் 2 பந்துகளில் 4, 6 என 10 ரன்கள் அடித்த டீ காக் சதத்தை நெருங்கினார். ஆனால் அப்போது ஆர்ச்சர் 2 ஒய்ட் பந்துகளை வீசினார்.

- Advertisement -

ரசிகர்கள் விளாசல்:

அதை அடிக்க முடியாத டீ காக் அதற்கடுத்த பந்தில் சிக்சர் அடித்த போதிலும் சதத்தை நெருங்க முடியவில்லை. ஏனெனில் 17.3 ஓவரில் 153/2 ரன்களை எடுத்த கொல்கத்தா 8 விக்கெட் வித்தியாசத்தில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. மறுபுறம் டீ காக் சதத்தை நழுவ விட்ட டீ காக் 97* (61) ரன்களுடன் தனது அணியை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இதையும் படிங்க: கொல்கத்தா அணிக்கெதிரான தோல்விக்கு நாங்க செய்த இந்த தவறு தான் காரணம் – ரியான் பராக் வருத்தம்

மேலும் கொல்கத்தாவுக்காக சேசிங் செய்த போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். இதற்கு முன் 2014 ஐபிஎல் ஃபைனலில் பஞ்சாப்புக்கு எதிராக கொல்கத்தாவுக்கு மனிஷ் பாண்டே 94 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. மறுபுறம் டீ காக் சதத்தை ஒய்ட் போட்டு வேண்டுமென்றே தடுத்ததாக ஜோப்ரா ஆர்ச்சரை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர். மேலும் கடந்த போட்டியில் ஹைதராபாத் உங்களை 76 ரன்கள் அடித்து நொறுக்கியதில் தவறே இல்லை என்றும் ரசிகர்கள் பேசுகின்றனர்.

Advertisement