1 வருடத்தில் அதிகம் முன்னேறிய பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ்.. இந்த வாய்ப்பை கொடுங்க.. பிசிசிஐக்கு கங்குலி பரிந்துரை

Sourav Ganguly
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி 26.75 கோடிக்கு வாங்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் தங்களது முதல் போட்டியில் குஜராத்தை 11 ரன்கள் வித்யாசத்தில் தோற்கடித்தது. நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் 244 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 97*, சசாங் சிங் 44*, பிரியான்ஸ் ஆர்யா 47 ரன்கள் எடுத்தனர்.

அடுத்ததாக விளையாடிய குஜராத் முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 232-5 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 74 ரன்கள் எடுத்த நிலையில் பஞ்சாப்புக்கு அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஸ்ரேயாஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

முன்னேறிய ஸ்ரேயாஸ்:

முன்னதாக 2022 காலகட்டங்களில் ஸ்ரேயாஸ் ஐயர் 3 வகையான இந்திய அணியிலும் அறிமுகமானார். அந்தளவுக்கு உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் அசத்திய அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 2023 உலகக் கோப்பையில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து இந்தியா ஃபைனல் செல்ல உதவினர். இருப்பினும் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு எதிராக அவர் பலவீனத்தைக் கொண்டிருந்தார்.

அதன் காரணமாக டி20 கிரிக்கெட்டில் தடுமாறிய ஸ்ரேயாஸ் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் ஷார்ட் பிட்ச் பந்துகளில் அடிக்கடி தனது விக்கெட்டை இழந்தார். இதற்கிடையே கடந்த வருடம் காயத்தைச் சந்தித்து குணமடைந்த அவரை பிசிசிஐ ரஞ்சிக்கோப்பையில் விளையாடுமாறு அறிவுறுத்தியது. ஆனால் அதை செய்யாததால் 2024 – 25 இந்திய அணியில் மத்திய சம்பள ஒப்பந்தத்தில் இருந்து ஸ்ரேயாஸ் அதிரடியாக நீக்கப்பட்டார்.

- Advertisement -

கங்குலி பரிந்துரை:

அதனால் பின்னடைவைச் சந்தித்த அவர் கடந்த வருடம் ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா வெல்ல உதவினார். அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் மீண்டும் அவரை புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கொண்டு வந்தார். அந்த வாய்ப்பில் ஷார்ட் பிட்ச் பந்துகளில் முன்னேறி நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் குவித்து இந்தியா கோப்பையை வெல்ல உதவினார்.

இதையும் படிங்க: 10 ஓவரில் 131 ரன்ஸ்.. ஹீரோ டூ ஜீரோ.. 3 டக் பாகிஸ்தான் வீரர் மோசமான உலக சாதனை.. 10 சிக்ஸருடன் ஓடவிட்ட ஃசைபர்ட்

தற்போது ஐபிஎல் தொடரிலும் அசத்தும் அவருக்கு 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடும் வாய்ப்பை மீண்டும் பிசிசிஐ கொடுக்க வேண்டுமென சௌரவ் கங்குலி பரிந்துரைத்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் (எக்ஸ்) அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “கடந்த ஒரு வருடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் அதிகம் முன்னேற்றத்தைக் கண்ட பேட்ஸ்மேன். 3 வகையான ஃபார்மட்டிலும் விளையாட தயாராக இருக்கிறார். லென்த்தில் இருந்த சில பிரச்சனைகளை சமாளித்து ஸ்ரேயாஸ் முன்னேறியுள்ளதைப் பார்ப்பது சிறப்பாக இருக்கிறது பிசிசிஐ” என்று கூறியுள்ளார்.

Advertisement