10 ஓவரில் 131 ரன்ஸ்.. ஹீரோ டூ ஜீரோ.. 3 டக் பாகிஸ்தான் வீரர் மோசமான உலக சாதனை.. 10 சிக்ஸருடன் ஓடவிட்ட ஃசைபர்ட்

NZ vs PAK
- Advertisement -

பாகிஸ்தான் அணி நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்ற நியூசிலாந்தை மூன்றாவது போட்டியில் பாகிஸ்தான் தோற்கடித்தது. குறிப்பாக இளம் வீரர் ஹசன் நவாஸ் மிரட்டலான சதத்தை அடித்து பாகிஸ்தானை வெற்றி பெற வைத்தார். இத்தொடரில் சமீப காலங்களில் சந்தித்த அடுத்தடுத்த தோல்விகளால் முகமது ரிஸ்வான், பாபர் அசாம் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை பாகிஸ்தான் கழற்றி விட்டது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஹசன் நவாஸ் போன்ற இளம் வீரர் அதிரடியாக விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுத்தது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் எழுச்சியை உண்டாக்கியதாக அந்நாட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் 4வது போட்டியில் வென்ற நியூசிலாந்து ஆரம்பத்திலேயே தொடரை வென்றது. அந்த நிலையில் இத்தொடரின் சாம்பிரதாய கடைசிப் போட்டி மார்ச் 26ஆம் தேதி வெலிங்டன் நகரில் நடைபெற்றது.

- Advertisement -

பாகிஸ்தான் சொதப்பல்:

அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் மீண்டும் மோசமாக விளையாடி 20 ஓவரில் 128-9 ரன்கள் மட்டுமே எடுத்தது. முகமது ஹாரிஸ் 11, ஹசன் நவாஸ் 0, ஓமர் யூசுப் 7, உஸ்மான் கான் 7, அப்துல் சமத் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதிகபட்சமாக கேப்டன் சல்மான் ஆகா 51, சடாப் கான் 28 ரன்கள் எடுத்தனர்.

நியூசிலாந்து அணிக்கு அதிகபட்சமாக ஜிம்மி நீசம் 5 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். அடுத்ததாக களமிறங்கிய நியூசிலாந்துக்கு 93 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஃபின் ஆலன் 27 (12) ரன்களில் அவுட்டானார். அவருடன் சேர்ந்து மறுபுறம் பாகிஸ்தான் பவுலர்களை முரட்டுத்தனமாக அடித்து நொறுக்கிய டிம் ஃசைபர்ட் 6 பவுண்டரி 10 சிக்ஸர்களை பறக்க விட்டு 97* (38) ரன்கள் விளாசி ஃபினிஷிங் செய்தார்.

- Advertisement -

மோசமான உலக சாதனை:

கூடவே மார்க் சேப்மன் 3, டேரில் மிட்சேல் 2* ரன்கள் எடுத்த உதவியுடன் 10 ஓவேரிலேயே 131-2 ரன்கள் எடுத்த நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அதனால் 4 – 1 (5) என்ற கணக்கில் இத்தொடரை வென்ற நியூஸிலாந்து அணி பாகிஸ்தானை வெற்றியை கொஞ்சம் கூட நெருங்க விடாமல் பாகிஸ்தானை ஓட விட்டது என்றே சொல்லலாம். மறுபுறம் சுபியன் முஹீம் 2 விக்கெட்டுகள் எடுத்தும் பாகிஸ்தான் ஆறுதல் வெற்றியைக் கூட பெற முடியவில்லை.

இதையும் படிங்க: இவரெல்லாம் ஒரு கேப்டனா.. அவரால் தான் குஜராத் அணி தோற்றது.. சுப்மன் கில்லை சாடிய – விரேந்தர் சேவாக்

இத்தொடரில் பாகிஸ்தான் வீரர் ஹசன் நவாஸ் 0, 0, 105*, 1, 0 என 3 முறை டக் அவுட்டானார். இதன் வாயிலாக ஒரு சர்வதேச டி20 தொடரில் 3 டக் அவுட்டான முதல் முழு அந்தஸ்து பெற்ற நாட்டைச் சேர்ந்த வீரர் என்ற மோசமான உலக சாதனையை நவாஸ் படைத்துள்ளார். இத்தொடரில் பாகிஸ்தானின் ஹீரோவாக அறியப்பட்ட அவர் கடைசியில் ஜீரோவாக தொடரை முடித்துள்ளார்.

Advertisement