ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 24ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நான்காவது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் லக்னோ 1 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியிடம் வெற்றியை கோட்டை விட்டது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ 250 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அடுத்ததாக விளையாடிய டெல்லி முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து 65-5 என ஆரம்பத்திலேயே விழுந்தது.
அதனால் தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட டெல்லிக்கு மிடில் ஆர்டரில் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய அசுட்டோஸ் சர்மா அதிரடியாக விளையாடி 66* (31) ரன்கள் விளாசி வெற்றியை பறித்தார். அவருடன் ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் 34, விப்ராஜ் நிகாம் 39 ரன்கள் விளாசி 19.3 ஓவரில் டெல்லிக்கு அற்புதமான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அதனால் லக்னோ முதல் போட்டியிலேயே பரிதாபமாக தோற்றது.
திட்டும் ஓனர்:
அந்த தோல்விக்கு 27 கோடிக்கு வாங்கப்பட்டு கேப்டனாக செயல்படும் ரிஷப் பண்ட் முக்கிய காரணமாக அமைந்தார். குறிப்பாக 6 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்திய அவர் கடைசி ஓவரில் மோகித் சர்மாவை ஸ்டம்ப்பிங் செய்யாதது லக்னோவின் தோல்விக்கு காரணமானது. அதனால் போட்டி முடிந்ததுமே ரிஷப் பண்ட்டை லக்னோ உரிமையாளர் சஞ்சீவ் கோயன்கா திட்டாத குறையாக பேசினார்.
கடந்த வருடம் 16 கோடிக்கு கேப்டனாக விளையாடிய கேஎல் ராகுலை அவர் வெளிப்படையாகவே பொதுவெளியில் திட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால் ராகுல் அந்த அணியிலிருந்து அமைதியாக மரியாதையுடன் வெளியேறி டெல்லி அணிக்கு மாறியுள்ளார். மறுபுறம் டெல்லியிலிருந்து அந்த இடத்திற்கு வந்துள்ள ரிஷப் பண்ட்டை கொஞ்சமும் மாறாத உரிமையாளர் சஞ்சீவ் அதே போலவே பொதுவெளியில் பேசினார்.
பணத்தால் முடியுமா:
இத்தனைக்கும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மற்றும் லக்னோ அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் அருகே நின்று கொண்டிருந்தார். அவர் கூட முதல் போட்டியில் சந்தித்த தோல்வி தானே என்ற வகையில் எதுவுமே சொல்லவில்லை. ஆனால் பொதுவெளியில் அப்படி பேசிய சஞ்சீவ் அதோடு நிற்காமல் லக்னோ அணியின் உடைமாற்றும் அறையிலும் வீரர்களிடையே பேசினார்.
குறிப்பாக நிறைய நேர்மறையான விஷயங்கள் கிடைத்ததாகவும் அதை அடுத்தப் போட்டியில் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார். இன்று ஏமாற்றம் கிடைத்தாலும் நன்றாக விளையாடிநீர்கள் என்று அவர் கொஞ்சம் வெறுப்பாக தெரிவித்தார். அதை ஜஸ்டின் லாங்கர் அதிர்ந்த முகத்துடன் பார்த்தார் என்றே சொல்லலாம். ஏனெனில் பொதுவாக உடைமாற்றும் அறையில் பயிற்சியாளர்கள் தான் வீரர்களுக்கான இப்படி உத்வேக பேச்சுக்களை கொடுப்பார்கள்.
இதையும் படிங்க: சேப்பாக்கம் மைதானத்திற்கு அடுத்து எனக்கு பிடித்த மைதானம் அதுதான் – தல தோனி ஓபன்டாக்
அதைப் பார்க்கும் ரசிகர்கள் லக்னோ அணிக்கு நீங்கள் தான் பிரச்சனையாக இருக்கிறீர்கள் என்று சஞ்சீவ் மீது சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஏனெனில் எத்தனைக் கோடிகளை செலவழித்தாலும் பணத்தால் உண்மையான கிரிக்கெட்டை பற்றிய அறிவை வாங்க முடியாது. அது களத்தில் விளையாடுபவர்களுக்கு மட்டுமே தெரியும். எனவே கிரிக்கெட்டை வெறும் வியாபாரமாக பார்க்காமல் நல்ல அணியை வாங்கி அவர்களுக்கு வெளியிலிருந்து ஆதரவைக் கொடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என்று ரசிகர்கள் வினவுகிறார்கள்.



