பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது கடந்த 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஆரம்பத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டி வரை முன்னேறி கொல்கத்தா அணியிடம் தோல்வியை சந்தித்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது. ஆனால் கடந்த ஆண்டு தவறவிட்ட அந்த கோப்பையை இந்த ஆண்டு கைப்பற்றியாக வேண்டிய முனைப்புடன் தற்போது மிகச் சிறப்பாக 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை துவங்கியுள்ளது.
ஏப்ரல் 17-ஆம் தேதி சன் ரைசர்ஸ் சரித்திரம் படைக்கும் : டேல் ஸ்டெயின்
அந்த வகையில் நடைபெற்று வரும் இந்த 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய ஹைதராபாத் அணியானது முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் குவித்து அசத்தியது.
அதன் பின்னர் ராஜஸ்தான் அணி 242 ரன்கள் மட்டுமே அடிக்க 44 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் நான்கு முறை 250 ரன்களுக்கு மேல் அடித்த அணியாகவும் சன் ரைசர்ஸ் அணி சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு முதலே மிகவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சன் ரைசர்ஸ் அணி வெகு விரைவில் 300 ரன்கள் அடிக்கும் என்று பலரும் பேசி வருகின்றனர்.
அதற்கு காரணம் அந்த அணியில் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் அமைக்கும் அதிரடியான துவக்கமும் அதன் பின்னர் தொடர்ச்சியாக இஷான் கிஷன், நித்திஷ் ரெட்டி, கிளாசன் போன்ற அதிரடியான பேட்டிங் வரிசையும் காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கும் லீக் போட்டியின் போது நிச்சயம் சன் ரைசர்ஸ் அணி 300 ரன்களை அடிக்கும் என அந்த அணியின் முன்னாள் வீரரான டேல் ஸ்டெயின் கணித்துள்ளார். இது குறித்து அவருடைய சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டதாவது :
இதையும் படிங்க : யார் இந்த விக்னேஷ் புத்தூர்? 30 லட்சம் கொடுத்து மும்பை இந்தியன்ஸ் வாங்கியதன் பின்னணி என்ன? – விவரம் இதோ
ஏப்ரல் 17-ஆம் தேதியான அன்று ஐபிஎல் தொடரில் முதல் முறையாக 300 ரன்களை நாம் பார்க்கலாம். இது என்னுடைய சிறிய கணிப்பு தான். யாருக்கு தெரியும் அந்த போட்டியின் போது நான் நேராக மைதானத்தில் இருந்து கூட அதை பார்க்கலாம் என தனது கணிப்பினை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே ஐபிஎல் தொடரில் 287 ரன்கள் வரை சென்றுள்ள சன் ரைசர்ஸ் அணி நிச்சயம் 300 ரன்கள் என்கிற அந்த சாதனையும் நிகழ்த்தும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.



