விராட் கோலி இதை மட்டும் செய்தால் போதும் ஆர்.பி.சி அணிக்கு தான் கப் – ஏ.பி.டி வில்லியர்ஸ் நம்பிக்கை

ABD
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 17 சீசன்களை நிறைவு செய்துள்ள வேளையில் எதிர்வரும் 2025-ஆம் ஆண்டிற்கான 18-வது ஐபிஎல் தொடரானது மார்ச் 22-ம் தேதி முதல் துவக்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் மோத இருக்கின்றன.

ஆர்.சி.பி அணி கோப்பையை ஜெயிக்க இதை செய்தான் போதும் : ஏ.பி.டி கருத்து

இதன் காரணமாக தற்போது இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை நடைபெற்று முதல் முடிந்துள்ள 17 சீசன்களிலும் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத ஆர்.சி.பி அணி இம்முறை கோப்பை வெல்ல வேண்டும் என்பதற்காக அதிக உத்வேகத்துடன் காணப்படுகிறது.

- Advertisement -

கடந்த ஆண்டு இருந்த அணியை விட இந்த ஆண்டு ஏகப்பட்ட வீரர்களை அந்த அணி மெகா ஏலத்தில் தேர்வு செய்தது அந்த அணிக்கு பலத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் பில் சால்ட், டிம் டேவிட், லியாம் லிவிங்ஸ்டன் போன்ற வெளிநாட்டு அதிரடி வீரர்களும், விராட் கோலி, ரஜத் பட்டிதார் போன்ற இந்தியாவை சேர்ந்த சிறப்பான வீரர்களும் இருப்பதனால் இம்முறை இந்த அணிக்கு கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.

ஆர்சிபி அணியில் பேட்டிங் எவ்வளவு சிறப்பாக இருக்கிறதோ அதேபோன்று இம்முறை பந்துவீச்சும் சிறந்த வீரர்களை அவர்கள் தேர்வு செய்திருக்கிறார்கள். இந்நிலையில் எதிர்வரும் இந்த தொடரில் ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல விராட் கோலி எவ்வாறு விளையாட வேண்டும்? என்பது குறித்து முன்னாள் பெங்களூரு அணியை சேர்ந்த வீரரான ஏபிடி சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த முறை விராட் கோலியின் மீது இருக்கும் அழுத்தத்தை பிலிப் சால்ட் எடுத்து விடுவார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடக் கூடியவர். அதேபோன்று மிடில் ஆர்டரிலும் நிறைய அதிரடி வீரர்கள் இருக்கிறார்கள் எனவே விராத் கோலி ஒருபுறம் நிதானமாக ஆங்கர் ரோல் விளையாடினால் மறுபுறம் மற்ற வீரர்களால் மிகச் சிறப்பாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்.

இதையும் படிங்க : விராட் கோலியை வைத்து ரிஸ்வானை கிண்டலடித்த ஆஸி வீரர் ப்ராட் ஹோக்.. பாக் ரசிகர்கள் எதிர்ப்பு

ஒருபுறம் விக்கெட் விழாமல் விராட் கோலி இன்னிங்சை கட்டமைத்தால் ஆர்.சி.பி அணி ஒவ்வொரு போட்டியிலும் பெரிய ரன் குவிப்பில் ஈடுபடும் அப்படி விராட் கோலி நின்று விளையாடினால் பல போட்டிகளில் வெற்றி பெறுவதுடன் கோப்பையை கைப்பற்றவும் வாய்ப்புள்ளது என ஏ.பி.டி வில்லியர்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement