ஃபார்ம், ஓய்வை பார்க்காதீங்க.. இந்திய அணியில் ரோஹித் ஏற்படுத்தியிருக்கும் இதை பாருங்க.. கம்பீர் பதிலடி

Gautam Gambhir 3
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. துபாயில் இத்தொடரில் விளையாடும் இந்தியா குரூப் சுற்றில் வங்கதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்தை தோற்கடித்தது. அப்படியே செமி ஃபைனலில் வலுவான உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா 2023 உலகக் கோப்பை ஃபைனல் தோல்விக்கு பதிலடி கொடுத்தது.

இந்தத் தொடரில் சுமாரான ஃபார்மில் இருந்த விராட் கோலி உட்பட கிட்டத்தட்ட அனைத்து வீரர்களும் நன்றாக விளையாடி இந்தியாவுக்கு வலு சேர்த்து வருகிறார்கள். ஆனால் கேப்டன் ரோஹித் சர்மா மட்டும் இன்னும் அரை சதம் கூட அடிக்கவில்லை. தனது சொந்த சாதனையைப் பற்றி கவலைப்படாத அவர் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாட முயற்சிப்பதால் பெரிய ரன்கள் எடுக்கவில்லை என்று சொல்லலாம்.

- Advertisement -

கம்பீர் பதிலடி:

இந்நிலையில் ரோஹித் சர்மாவின் ஃபார்ம் மற்றும் ஓய்வுக்கு முன் இன்னும் எவ்வளவு விளையாடுவார் என்பது பற்றி பயிற்சியாளர் கௌதம் கம்பீரிடம் செய்தியாளர் கேட்டார். அதற்கு கௌதம் கம்பீர் தம்முடைய ஸ்டைலில் எவ்வளவு ரன்கள் அடிக்கிறார் என்பதைப் பார்க்காமல் அணியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறார் என்பதைப் பாருங்கள் என்று பதிலடி கொடுத்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனல் வரவுள்ளது. அதற்கு முன்பாக என்னால் என்ன சொல்ல முடியும்? உங்களுடைய கேப்டன் இது போன்ற வழியில் விளையாடினால் அது உங்களுடைய அணியும் பயமின்றி தைரியமாக விளையாட வேண்டும் என்ற அணுகுமுறையை பின்பற்றுவதற்கான நல்ல சமிக்கையாகும். நீங்கள் ரோகித்தை ரன்கள் வைத்து மதிப்பிடுகிறீர்கள்”

- Advertisement -

தாக்கத்தை பாருங்க:

“ஆனால் நாங்கள் அவர் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பார்க்கிறோம் அது தான் வித்தியாசம். செய்தியாளர்களாக நீங்கள் சராசரி மற்றும் நம்பர்களை மட்டுமே பார்ப்பீர்கள். ஆனால் ஒரு பயிற்சியாளராக அணியாக நாங்கள் அதைப் பார்ப்பதில்லை. எங்களது கேப்டன் களத்தில் முதல் ஆளாக எங்களுக்கு கையை உயர்த்தினால் அதை விட எங்களுக்கு சிறந்த விஷயம் இருக்க முடியாது” எனக் கூறினார்.

இதையும் படிங்க: 362 ரன்ஸ்.. ரவீந்திர, வில்லியம்சன் சதம்.. நியூஸிலாந்து புதிய உலக சாதனை ஸ்கோர்.. வலுவாக சிக்கிய தெ.ஆ

அவர் கூறுவது போல ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே எதிரணியை அடித்து நொறுக்கி இந்தியாவுக்கு நல்லத் துவக்கத்தை கொடுக்கவே முயற்சித்து வருகிறார். அப்படி விளையாடுவதால் அவர் பெரிய ரன்கள் குவிக்கவில்லை என்றாலும் அடுத்து வரும் பேட்ஸ்மேன்களின் வேலையை எளிதாக்க முயற்சிக்கிறார். அந்த வகையில் சமீபத்திய இங்கிலாந்து ஒருநாள் தொடரில் சதத்தை அடித்த ரோகித் நல்ல ஃபார்மில் இருந்தாலும் தன்னைப் பற்றி கவலைப்படாமல் அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement