முதல் மேட்ச்ன்னா இந்நேரம் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்திருக்கும்.. கோலி கம்ப்ளீட் பேக்கேஜ்.. ரமீஸ் ராஜா

Ramiz Raza
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 தொடரில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் பரிதாபமாக முதல் அணியாக வெளியேறியது. பிப்ரவரி 19ஆம் தேதி துவங்கிய இந்தத் தொடரில் முதல் போட்டியில் அந்த அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக துபாயில் பரம எதிரி இந்தியாவுக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் மற்றுமொரு தோல்வியை சந்தித்தது.

அப்படி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்ததால் தொடர் துவங்கிய 5வது நாளிலேயே பாகிஸ்தான் கோப்பையை தக்க வைக்க முடியாமல் பரிதாபமாக வெளியேறியுள்ளது. அந்தத் தோல்வி பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் தங்களுடைய முதல் போட்டியில் இந்தியா அல்லது வங்கதேசத்தை சந்தித்திருந்தால் அதில் இந்நேரம் வெற்றியைப் பெற்று செமி ஃபைனல் வாய்ப்பை வைத்திருக்கும் என்று முன்னாள் கேப்டன் ரமீஷ் ராஜா கூறியுள்ளார்.

- Advertisement -

ஆரம்பமே தோல்வி:

மாறாக முதல் போட்டியிலேயே நியூசிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்ததால் 3வது போட்டியில் விளையாடுவதற்கு முன்பே பாகிஸ்தான் நாக் அவுட் செய்யப்பட்டதாக அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஏன் நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் தங்களின் முதல் போட்டியில் விளையாடியது என்று நான் ஆச்சரியப்படுகிறேன்”

“அவர்கள் தங்களது முதல் போட்டியை வங்கதேசத்துக்கு எதிராக விளையாடியிருக்க வேண்டும். வங்கதேசம் வலுவான அணியாக இருந்தாலும் அது எளிதானப் போட்டியாக இருந்திருக்கும். நியூசிலாந்துக்கு எதிராக ஓப்பனிங் போட்டியில் விளையாடிய அவர்கள் தோல்வியை சந்தித்தார்கள். நியூசிலாந்துக்கு எதிராக ஆரம்பத்திலேயே சந்தித்த தோல்வி தான் பாகிஸ்தானுக்கு அழுத்தத்தை உண்டாக்கியது”

- Advertisement -

கோலிக்கு பாராட்டு:

“ஆனால் இந்தியா அல்லது வங்கதேசத்துக்கு எதிராக ஏன் பாகிஸ்தான் தங்களது முதல் போட்டியை விளையாடவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. அப்படி நடந்திருந்தால் அழுத்தம் சமமாக இருந்திருக்கும். விராட் கோலி அனைத்தையும் கொண்டுள்ளார். பொறுமையையும் அதிரடியையும் கொண்டுள்ள அவர் கம்ப்ளீட் பேக்கேஜ். விராட் கோலி தமக்குத் தாமே சவால் வைத்துக் கொள்கிறார்”

இதையும் படிங்க: என் வாழ்நாளில் இப்படி ஒரு அசிங்கத்தை பார்த்ததில்லை.. பாகிஸ்தான் அணியின் நிலையை விமர்சித்த – வாசிம் அக்ரம்

“ஒவ்வொரு பவுலருக்கு எதிராகவும் தன்னம்பிக்கையுடன் விளையாடும் அவர் எதிரணியை செட்டில் செய்ய விடுவதில்லை” என்று கூறினார். முன்னதாக இந்தத் தொடருக்கான அட்டவணையை ஐசிசி தான் விளையாடுகிறது. எனவே முதல் போட்டியில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் விளையாடுவதை ஐசிசி தான் முடிவு செய்தது. ஒருவேளை முதல் போட்டியிலேயே இந்தியாவை சந்தித்திருந்தாலும் தற்போதுள்ள ஃபார்முக்கு பாகிஸ்தான் வெல்லுமா என்பது சந்தேகமாகும்.

Advertisement