இந்திய கிரிக்கெட் அணி 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் தங்களுடைய பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிப்ரவரி 23ஆம் தேதி துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 242 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய இந்தியாவுக்கு விராட் கோலி சதத்தை அடித்த 100*, ஸ்ரேயாஸ் ஐயர் 56, சுப்மன் கில் 46 ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற வைத்தனர்.
அதனால் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்ற இந்தியா செமி ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. மறுபுறம் பாகிஸ்தான் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்ததால் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்காமல் வெளியேறியுள்ளது. முன்னதாக இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சமீப காலங்களில் சுமாரான ஃபார்மில் இருந்து வந்தார்.
அக்தர் விளாசல்:
இருப்பினும் தமக்கு மிகவும் பிடித்த ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக சதத்தை அடித்த அவர் தன்னை சாம்பியன் பிளேயர் என்பதை நிரூபித்துள்ளார். மறுபுறம் கடந்த பல வருடங்களாகவே தடுமாறி வரும் பாபர் அசாம் 23 ரன்கள் எடுத்து பாகிஸ்தானின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரை ஹீரோவாக கொண்ட விராட் கோலி தான் உண்மையான கிரிக்கெட்டின் கிங் என்று சோயப் அக்தர் பாராட்டியுள்ளார்.
ஆனால் தடவலாக (டுக் டுக்) விளையாடும் பாபர் அசாம் எப்போதும் விராட் கோலியுடன் ஒப்பிடும் அளவுக்கு இல்லை என்று அவர் சாடியுள்ளார். சொல்லப்போனால் கிங் என்ற பெயரில் பாபர் அசாம் பிராடு என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி டென் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நாம் எப்போதும் விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிடுகிறோம்”
கோலியின் ஹீரோ சச்சின்:
“இங்கே விராட் கோலியின் ஹீரோ யார் என்று என்னிடம் சொல்லுங்கள்? 100 சதங்களை அடித்த சச்சின் டெண்டுல்கர் ஆவார். அவரைப் பின்பற்றும் விராட் கோலி சேசிங் செய்வதில் தனக்கான பெயரை உருவாக்கியுள்ளார். பாபர் அசாமின் ஹீரோ யார்? டொக் டொக் (பெயரை குறிப்பிடவில்லை). நீங்கள் தவறான ஹீரோக்களை தேர்ந்தெடுத்துள்ளீர்கள்”
இதையும் படிங்க: தோக்கப்போறோம்னு தெரிஞ்சே தவறு செய்த ஷாஹின் அப்ரிடியை திட்டிய இந்திய ரசிகர்கள் – என்ன நடந்தது?
“உங்களுடைய செயல்முறைகள் தவறு. நீங்கள் ஆரம்பத்தில் இருந்தே ஃபிராடு” என்று பாகிஸ்தான் தோற்ற வேதனையில் கடுமையாக விமர்சித்தார். அவர் கூறுவது போல பாபர் அசாம் பெரும்பாலும் ஜிம்பாப்வே போன்ற 2வது தர அணிகளுக்கு எதிராகவே அசத்தியுள்ளார். டாப் அணிகளுக்கு எதிராக அதுவும் ஐசிசி போன்ற அழுத்தம் நிறைந்த தொடர்களில் அவர் பெரியளவில் அசத்தியதில்லை என்பது நிதர்சனமாகும்.



