நானும் பாத்தேன் நல்லவேளை நான் இப்போ பிறக்கல.. அபிஷேக்கை நேராக பாராட்டிய அக்தர்.. 2 முக்கிய அட்வைஸ்

Shoaib Akhtar
- Advertisement -

இளம் இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா சமீப வருடங்களாக ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிரடியாக விளையாடினார். அதனால் இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் முதல் போட்டியில் டக் அவுட்டானாலும் இரண்டாவது போட்டியில் சதத்தை அடித்து அசத்தினார். அப்போதிலிருந்து அவருக்கு ஓரளவு நிலையான வாய்ப்புக் கொடுக்கப்பட்டு வருகிறது.

அதில் அவ்வப்போது தடுமாறும் அபிஷேக் சரியான நேரத்தில் அடித்து நொறுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வரிசையில் இங்கிலாந்துக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற டி20 தொடரின் கடைசிப் போட்டியில் மிரட்டலாக பேட்டிங் செய்த அவர் 135 (45) ரன்கள் குவித்தார். குறிப்பாக ஏழு பவுண்டரிகளை அடித்த அவர் 13 சிக்சர்களை பறக்க விட்டு நிறைய சாதனைகளையும் படைத்தார்.

- Advertisement -

திறமையான அபிஷேக்:

இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. அதில் இந்தியாவின் ஆட்டத்தைப் பார்ப்பதற்காக அபிஷேக் சர்மா துபாய்க்கு சென்றுள்ளார். அப்போது எதார்த்தமாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் அவரை சந்தித்துள்ளார். அந்த சந்திப்பில் நல்லவேளையாக இந்தத் தலைமுறையில் தாம் பிறக்கவில்லை என்று அக்தர் கலகலப்பாக கூறியுள்ளார்.

இல்லையேல் அபிஷேக் ஷர்மா தம்மையே அடித்திருப்பார் என்று பாராட்டிய அவர் சில ஆலோசனைகளையும் கூறியுள்ளார். இது பற்றி “அற்புதமான திறமை கொண்ட அபிஷேக் ஷர்மாவை துபாயில் சந்தித்தேன். அவர் வரும் காலங்களில் அற்புதங்களை நிகழ்த்துவார்” என்ற தலைப்பில் அக்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

வாழ்த்திய அக்தர்:

“இந்தத் தலைமுறையில் நான் பிறக்காததற்கு மகிழ்ச்சியடைகிறேன். இந்த இளம் பையனை மக்கள் விரும்புவதற்கு காரணம் இருக்கிறது. அவர் சதத்தை அடித்தார். நான் உங்களுடைய ஆட்டத்தைப் பார்த்தேன். அது அற்புதமாக இருந்தது. உங்களுக்கு இங்கே நான் சில ஆலோசனைகளை கொடுக்கிறேன். உங்களுடைய பலத்தை எப்போதும் விடாதீர்கள்”

இதையும் படிங்க: 2008லயே இதை பாத்தேன்.. சுயநலமற்ற ரோஹித்திடம் சோம்பேறித்தனமான நளினம் இருக்கு.. அக்ரம், ஹபீஸ் பாராட்டு

“அதே சமயம் உங்களை விட சிறப்பாக மக்களிடம் நண்பர்களாக மாறுங்கள். இந்த இளமையான திறமையான பையனுக்கு சிறந்த வாழ்வு இருக்கிறது. அவருக்கு நான் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார். அவர் கூறுவது போல ரோகித் சர்மா ஓய்வுக்கு பின் அபிஷேக் சர்மா இந்திய அணியில் தொடர்ந்து துவக்க வீரராக விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது.

Advertisement