2008லயே இதை பாத்தேன்.. சுயநலமற்ற ரோஹித்திடம் சோம்பேறித்தனமான நளினம் இருக்கு.. அக்ரம், ஹபீஸ் பாராட்டு

Wasim Akram
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. அதில் பாகிஸ்தான் தங்களுடைய முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோற்றதால் செமி ஃபைனல் செல்லும் வாய்ப்பைத் தக்க வைக்க இந்தியாவை தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மறுபுறம் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி பாகிஸ்தானையும் தோற்கடித்து செமி ஃபைனல் செல்லத் தயாராக உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கொஞ்சம் சோம்பேறித்தனமான அதே சமயம் நளினமாக பேட்டிங் செய்யக்கூடிய திறமை இருப்பதாக பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் பாராட்டியுள்ளார். 2008 ஆஸ்திரேலிய முத்தரப்பு தொடரிலேயே அவரிடம் ஸ்பெஷல் திறமை இருப்பதைப் பார்த்ததாகவும் அக்ரம் கூறியுள்ளார். இது பற்றி பிடிவி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

2008லயே பார்த்தேன்:

“ரோஹித் சர்மாவிடம் ஒரு சோம்பேறித்தனமான நளினம் இருக்கிறது. அவர் ஸ்பெஷலானவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்துள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2008 முத்தரப்பு ஒருநாள் தொடரில் நான் வர்ணனையாளராக பணியாற்றினேன். அந்த வர்ணனை அறையில் இருந்த அனைவருமே இவரிடம் ஏதோ ஸ்பெஷல் திறமை இருப்பதாக கணித்தோம்”

“அந்தத் தொடரில் ஒரு போட்டியில் நல்ல 70 ரன்கள் அடித்த அவர் கண்களில் பார்ப்பதற்கு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் பேசிய முகமது ஹபீஸ் இந்திய அணியில் ரோஹித் சர்மா சுயநலமற்ற அணுகுமுறையை உருவாக்கியதாக பாராட்டினார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

சுயநலமற்ற ரோஹித்:

“கேப்டனாக வந்ததும் இந்திய அணியில் சுயநலமற்ற அணுகுமுறையை நான் எடுத்து வர வேண்டும் என்ற சூழ்நிலையை ரோஹித் சர்மா உருவாக்கினார். ஏனெனில் இந்திய அணியில் சிலர் தங்களுடைய சொந்த சாதனைகளுக்காக விளையாடுவதாக ஒரு புகார் இருந்தது. இந்திய அணியில் பெரிய சூப்பர் ஸ்டார்கள் இருந்தார்கள். ஆனால் செயல்பாடுகள் இல்லை”

இதையும் படிங்க: குறைச்சு எடை போடல.. அவங்கள ஹேப்பியாக்கும் இந்தியா – பாகிஸ்தான்னா சும்மாவா? கில் பதிலடி

“அப்போது கேப்டனாக முன் நின்று ரோகித் அணியை வழி நடத்தினார். சதத்தை நெருங்கினாலும் பிரச்சனை இல்லை தேவைப்பட்டால் பவுண்டரியுடன் நான் அதைட்ஜ் தொடுவேன் என்ற வகையில் அவர் விளையாடினார். சொந்த சாதனைக்காக அவர் சிங்கிள் எடுப்பதில்லை. அவர் தன்னுடைய சொந்த சாதனைகளுக்கு முன்பாக அணியை முன்னிறுத்துகிறார். களத்தில் நாம் விளையாடினால் அது அணியாக விளையாட வேண்டும் என்ற கலாச்சாரத்தை அவர் இந்திய அணியில் உருவாக்கினார்” என்று பாராட்டினார்.

Advertisement