ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்குகிறது. உலகின் டாப் 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் மினி உலகக் கோப்பை என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறது. இத்தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் வென்றால் தான் ஃபைனலுக்குச் செல்ல முடியும் என்ற சூழ்நிலை இருக்கும் என்பதால் இது நாக் அவுட் கோப்பை என்றும் அழைக்கப்படுகிறது.
அப்படிப்பட்ட இந்தத் தொடரில் 2002, 2013 ஆகிய 2 சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ள இந்தியா அதிக முறை வென்ற அணி என்ற உலக சாதனையை ஆஸ்திரேலியாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்தத் தொடரில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்த டாப் வீரர்களை பற்றி பார்ப்போம்:
1. ரவீந்திரன் ஜடேஜா: 2013, 2017 ஆகிய 2 தொடரில் விளையாடியுள்ள இவர் 10 போட்டிகளில் 16 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
டாப் பவுலர்கள்:
அதனால் சாம்பியன்ஸ் டிராபியில் அதிக விக்கெட்டுகள் எடுத்துள்ள இந்திய வீரராக சாதனை படைத்துள்ள இவர் 5 விக்கெட்டுகள் எடுத்த ஒரே இந்திய வீரராகவும் சாதனை படைத்துள்ளார். குறிப்பாக 2013இல் அதிக விக்கெட்டுகள் எடுத்து தங்கப் பந்து விருதை வென்ற ஜடேஜா இந்தியா கோப்பையை வெல்ல உதவினார்.
2. ஜாஹீர் கான்: 2000, 2002 ஆகிய 2 தொடர்களில் விளையாடிய இவர் 9 போட்டிகளில் 15 விக்கெட்டுகள் எடுத்து சாம்பியன்ஸ் டிராபியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வேகப்பந்து வீச்சாளராக சாதனை படைத்துள்ளார்.
3. சச்சின் டெண்டுல்கர்: பேட்டிங் ஜாம்பவானான இவர் அற்புதமான பகுதி நேர பவுலர் என்பதை அனைவரும் அறிவோம். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக 1998 – 2009 காலகட்டங்களில் 11 இன்னிங்ஸில் சச்சின் 14 விக்கெட்டுகளை எடுத்து இந்தப பட்டியலில் மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
3. ஹர்பஜன் சிங்: 2002 – 2009 வரையிலான காலகட்டங்களில் 13 போட்டிகள் விளையாடிய இவர் 14 விக்கெட்டுகள் எடுத்து இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இந்திய பட்டியல்:
4. புவனேஷ்வர் குமார்: 2013, 2017 ஆகிய 2 தொடர்களில் 10 போட்டிகளில் விளையாடிய இவர் 13 விக்கெட்டுகளை எடுத்து 4வது இடத்தை பிடித்துள்ளார். 2013 சாம்பியன்ஸ் கோப்பையை வெல்ல இவரும் முக்கிய பங்காற்றினார்.
4. இஷாந்த் சர்மா: 2009, 2013 ஆகிய 2 தொடர்களில் விளையாடியுள்ள இவர் வெறும் 7 போட்டியிலேயே 13 விக்கெட்டுகள் எடுத்து 4வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்
இதையும் படிங்க: அந்த லாங்குவேஜ் பிரச்சனை.. 2021 முதல் பாபர் இன்னும் முன்னேறாம தடுமாற இதான் காரணம்.. கிப்ஸ் ஓப்பன்டாக்
2013 ஃபைனலில் இவர் மட்டும் முக்கிய நேரத்தில் இரண்டு விக்கெட்டுகள் எடுக்காமல் போனால் இந்தியா வென்றிருக்காது.
5. அஜித் அகர்கர், அனில் கும்ப்ளே, ஆசிஷ் நெஹ்ரா: இந்த மூவருமே தலா 11 விக்கெட்டுகள் எடுத்து இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.



