இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டியானது சிட்னி நகரில் இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய அணியை பாராட்டிய கம்பீர் :
நடைபெற்று முடிந்த இந்த சிட்னி போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியானது இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
அதோடு கடந்த 10 ஆண்டுகளுக்கு பின்னர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியிலும் விளையாட ஆஸ்திரேலியா அணி தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியை இந்த போட்டியில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி குறித்து போட்டி முடிந்த பிறகு பாராட்டிய இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ஒரு வீரரை மட்டுமே சார்ந்து இருக்காத ஒரு நல்ல அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது.
இந்த தொடர் முழுவதுமே ஆஸ்திரேலியா வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினர். இந்த கடைசி போட்டியில் பும்ரா இல்லாததால் வெற்றி பெற முடியவில்லை என்று நான் கூற விரும்பவில்லை. ஏனெனில் இந்த போட்டியிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் எங்களிடம் இருந்தன.
இதையும் படிங்க : ரேஸில் இருந்து வெளியேறிய இந்திய அணி.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் – விளையாடப்போவது யார்?
இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 250 முதல் 275 ரன்கள் வரை இலக்காக நிர்ணயித்திருந்தால் ஆஸ்திரேலிய அணிக்கு சவால் அளித்திருக்க முடியும். ஆனால் எந்த ஒரு வீரரை மட்டுமே சார்ந்து இல்லாத ஒரு நல்ல அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது என ஆஸ்திரேலிய அணியை பாராட்டி இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேசியது குறிப்பிடத்தக்கது.



