ரேஸில் இருந்து வெளியேறிய இந்திய அணி.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் – விளையாடப்போவது யார்?

IND-vs-AUS
- Advertisement -

டெஸ்ட் போட்டிகளின் மீதான ஈர்ப்பை அதிகரிக்கும் வகையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை உருவாக்கி நடத்தி வருகிறது. அந்த வகையில் இதுவரை நடைபெற்று முடிந்த இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியிலும் இந்திய அணி விளையாடி தோல்வியை சந்தித்து இருந்தது. முதலாவதாக 2019-21 ஆண்டில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்தது.

இறுதிப்போட்டியில் விளையாட இருக்கும் அணிகள் எது? :

அடுத்ததாக 2021-23 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக தற்போது நடைபெற்று வரும் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி விளையாடி வந்தது.

- Advertisement -

ஆனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரினை ஒன்றுக்கு மூன்று (1-3) என்ற கணக்கில் இந்திய அணி இழந்துள்ளதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இந்திய அணி தவற விட்டுள்ளது. இந்த தோல்வி இந்திய ரசிகர்கள் மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அதேவேளையில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா அணி நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி 19 போட்டிகளில் விளையாடி 9 வெற்றி 8 தோல்விகள் என 50 சதவீத புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை இப்படித்துள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணி தற்போது இந்த ரேஸிலிருந்து வெளியேறியுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக இந்த இறுதிப் போட்டியில் விளையாடும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் தென்னாப்பிரிக்க அணியும் சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை கைப்பற்றி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

இதையும் படிங்க : ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தோல்வி.. இந்திய வீரர்களுக்கு புதிய கட்டளை விதித்த கம்பீர் – விவரம் இதோ

இதன்காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான அந்த போட்டி ஜூன் மாதம் 11-ஆம் தேதி துவங்கி ஜூன் மாதம் 15-ஆம் தேதி வரை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement