ஆஸ்திரேலிய மண்ணில் வெளிநாட்டு வீரராக மாபெரும் சாதனையை நிகழ்த்திய ரிஷப் பண்ட் – விவரம் இதோ

Pant
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது சிட்னி நகரில் நேற்று ஜனவரி 3-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணியானது 185 ரன்கள் குவித்தது. அடுத்ததாக ஆஸ்திரேலிய அணியையும் தங்களது சிறப்பான பந்துவீச்சின் மூலம் 181 ரன்களுக்கு சுருட்டியது.

அசத்தல் சாதனையை நிகழ்த்திய ரிஷப் பண்ட் :

இதன் காரணமாக நான்கு ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை குவித்துள்ளது. இதன் காரணமாக 145 ரன்கள் முன்னிலையில் உடன் நாளைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

இன்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஜடேஜா 8 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்த போட்டியின் போது இரண்டாவது இன்னிங்சில் ஐந்தாவது வீரராக களம் இறங்கிய ரிஷப் பண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 33 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர் என 66 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

மேலும் இந்த போட்டியின் போது அவர் ஒரு புதிய சாதனையையும் ஆஸ்திரேலியா மண்ணில் நிகழ்ச்சி உள்ளார். அந்த வகையில் வெளிநாட்டு வீரராக ஆஸ்திரேலிய மண்ணில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை ரிஷப் படைத்துள்ளார்.

- Advertisement -

இந்த போட்டியின் போது இரண்டாவது இன்னிங்சில் 29 பந்துகளை சந்தித்த நிலையில் சிக்ஸர் அடித்து அரைசதத்தை பூர்த்தி செய்து ஒரு வெளிநாட்டு வீரராக ஆஸ்திரேலிய மண்ணில் அதிவேக அரைசதம் டெஸ்ட் போட்டிகளில் அடித்த வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சிட்னி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் வரலாற்று சாதனையை நிகழ்த்திய – யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

ஏற்கனவே இந்திய வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த வீரராகவும் ரிஷப் பண்ட் தான் முதலிடத்தில் உள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு பெங்களூரு நகரில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணிக்கெதிராக 28 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement