சிட்னி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் வரலாற்று சாதனையை நிகழ்த்திய – யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

Jaiswal
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டியானது ஜனவரி 3-ஆம் தேதி சிட்னி நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் இரண்டாம் நாளான இன்றே இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

சாதனை நிகழ்த்திய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் :

இவ்வேளையில் இந்த போட்டியின் முடிவு நிச்சயம் மூன்றாவது அல்லது நான்காவது நாளில் தெரிந்துவிடும். இதன் காரணமாக இந்த போட்டியானது தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

- Advertisement -

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 185 ரன்கள் மட்டுமே குவிக்க ஆஸ்திரேலியா அணி 181 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக நான்கு ரன்கள் முன்னிலையுடன் தற்போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.

இவ்வேளையில் இரண்டாவது இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே இந்திய அணியின் இளம் துவக்க வீரராக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் முதல் ஓவரை சந்தித்த ஜெய்ஸ்வால் :

- Advertisement -

ஸ்டார்க் ஓவருக்கு எதிராக நான்கு பவுண்டரிகளை விளாசி 16 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்திய அணியின் துவக்க வீரராக முதல் ஓவரிலேயே அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ரோஹித் சர்மா மீண்டும் திரும்புவது கடினம்.. அதுக்கு காரணமும் இருக்கு – ரிக்கி பாண்டிங் கருத்து

இரண்டாவது இன்னிங்சின் போது அதிரடியாக ஆட்டத்தை துவங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 35 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியின் மூன்றாவது செஷன் வரை 6 விக்கெட்டுகளை 130 ரன்கள் குவித்துள்ளதால் தற்போதைய நிலையில் 134 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement